Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 10 ஆகஸ்ட், 2019

2020 முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் அமல்: ராம்விலாஸ் பஸ்வான்

2020 முதல் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் அமல்: ராம்விலாஸ் பஸ்வான்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

2020 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் அமளுக்கு வரும் என ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்..!
நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவரும், எந்த பகுதியிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். இந்த திட்டத்துக்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், முதற்கட்டமாக நேற்று 4 மாநிலங்களில் இந்த திட்டத்தை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கிவைத்தார். அதன்படி ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மராட்டியம் மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் வாங்கிக்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் மூலம் ஆந்திரா மக்கள் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது தெலுங்கானாவிலோ பொருட்கள் வாங்க முடியும். மேலும் தெலுங்கானா மக்களும் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது ஆந்திராவிலோ பொருட்கள் வாங்கலாம். இதைப்போல குஜராத், மராட்டிய மக்களும் தங்கள் மாநிலங்களுக்குள் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். அடுத்ததாக அரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய 7 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகமாகி இருக்கிறது. தற்போது இந்த மாநில மக்கள் தங்கள் மாநிலத்துக்குள் எந்த பகுதியிலும் பொருட்கள் வாங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து மேற்படி 11 மாநிலங்களும் தங்களுக்குள்ளே எந்த மாநிலத்திலும் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு (2020) ஜனவரிக்குள் அமலில் வரும் என மத்திய உணவுத்துறை செயலாளர் ரவி காந்த் தெரிவித்தார். ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மராட்டியம் மாநிலங்களுக்கு இடையேயான ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தபின் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இன்று (நேற்று) ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தினம். தலா 2 மாநிலங்களுக்கு இடையேயான ரேஷன் கார்டு திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். அடுத்த ஆண்டு ஜூன் 1-ந் தேதிக்குள் அனைத்து மாநிலங்களையும் திட்டத்தில் சேர்த்து தேசிய அளவில் முழுமையாக செயல்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்துக்கான உணவு பொருள் கையிருப்பை எவ்வாறு பராமரிப்பீர்கள்? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஏனெனில் இந்திய உணவு கழகத்தின் குடோன்கள் அனைத்தும் போதுமான கொள்ளளவுடன் இருப்பதுடன், கூடுதலாக 3 மாதங்களுக்கு தேவையான கூடுதல் பொருட்களை இருப்பு வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!