இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பிறந்து
6 நாட்களே ஆன கைக்குழந்தையை கைப்பையில் மறைத்து எடுத்து சென்ற பெண்!!
இந்த
பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல்
நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது
அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம்
மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக
கூட அமையலாம். இந்நிலையில், பிறந்து 6 நாட்களே ஆன கைக்குழந்தையை கைப்பையில்
மறைத்து எடுத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ்
தலைநகரான மணிலாவிலுள்ள விமான நிலையத்தில், பயணிகளின் உடமைகளை சோதித்த
அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அமெரிக்க பெண் ஒருவரின் உடமையை சோதனையிட்ட
அதிகாரிகள், பிறந்து 6 நாட்களே ஆன குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தைக்கான எவ்வித
ஆவணங்களையும் சமர்ப்பிக்காத அந்த பெண், தான் தோளில் மாட்டியிருந்த சற்றே பெரிதான
கைப்பையில் வைத்து பச்சிளம் குழந்தையை எடுத்து சென்றுள்ளார்.
இதையடுத்து
குழந்தையை மீட்ட அதிகாரிகள், ஜெனிபர் டாபோல்ட் என்ற அந்த பெண்ணிடம் விசாரணை
மேற்கொண்டனர். அதில், தான் குழந்தைக்கு உறவினர் எனவும், அதனை நிரூபிக்க தம்மிடம்
ஆவணங்கள் இல்லை எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த
குழந்தைகள் பெற்றோர் அல்லாத பிறருடன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டுமானால்,
பெற்றோரின் கைப்பட எழுதிய ஒப்புதல் கடிதம் அல்லது உரிய ஆவணங்கள் வைத்திருக்க
வேண்டும். எவ்வித ஆவணங்களும் இல்லாத அந்த குழந்தை எந்த நாட்டை சேர்ந்தது என்பதும்
தெரியாததால் அதனை காப்பகத்திற்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், அந்த பெண்ணை தேசிய
புலனாய்வு முகமைக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக