>>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 14 செப்டம்பர், 2019

    பிரம்மஹத்தி தோஷம்

    Image result for பிரம்மஹத்தி தோஷம்

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து பார்வை செய்தாலும், குருவின் சாரத்தில் சனியும் - சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் அது பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். இந்த தோஷமானது ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் வரும்.

    பிரம்மஹத்தி தோஷம் எதனால் வருகிறது?

    பிரம்மன் படைத்த ஒரு உயிரைக் கொள்வதால்தான் இந்த பிரம்மஹத்தி தோஷமானது ஏற்படுகிறது.

    வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிட்டாலும் இந்த தோஷம் ஏற்படும்.

    சென்ற பிறவிகளில், ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல் போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படும்.

    ஏதேனும் ஒரு பொருளிற்கோ, பொன்னிற்கோ ஆசைப்பட்டு ஒரு உயிரை வதம் செய்தால் இந்த தோஷமானது பற்றிக் கொள்ளும். பெற்றோர்களை கவனிக்காமல் தனியாக விட்டுவிட்டாலும் இந்த தோஷம் ஏற்படும். இந்த பாவமானது நமது தலைமுறைகளையும் தொடரும்.

    பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

    பிரம்மஹத்தி தோஷம் உடைய ஜாதகர்கள் வாழ்வில் நிம்மதி இருக்காது. தேவையில்லாத எதிர்மறை எண்ணங்கள் அவர்களை துன்புறுத்தும்.

    இந்த தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமண தாமதம் ஏற்படும்.

    கல்வி, வேலை மற்றும் குழந்தைபேறு இவற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும். கடன் அதிக அளவில் ஏற்படும். அதிக அளவில் சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது.

    கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும்.

    நல்லறிவு, நல்ல பழக்கங்கள், நல்ல உழைப்பு போன்றவை இருக்கும். ஆனால் தகுந்த பலன்கள் கிடைக்காது.

    பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்ட கடவுள்கள் :

    பைரவர் - பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    சப்தகன்னியர் - மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    இராமர் - இராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    வீரசேனன், வரகுண பாண்டியன் - பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக