Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

அஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா?

அஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா?
ஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு, PF அல்லது சுகன்யா கணக்கு இருந்தால், அது தொடர்பான புதிய விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். 
ஆம்., இந்த புதிய விதிகளின்படி, உங்கள் கணக்கில் குறைந்தபட்சம் 500 ரூபாய் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நீங்கள் இதைச் செய்யாவிட்டால், நடப்பு நிதியாண்டின் கடைசி வேலை நாளிலிருந்து அதாவது மார்ச் 31, 2020-க்குப் பிறகு நீங்கள் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இது ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படும் செயல்முறையாகும். மேலும், உங்கள் கணக்கு இருப்பு பூஜ்ஜியமாக வைத்திருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவ்வாறு பூஜ்ஜிய ரூபாய் வைத்திருக்கும் பட்சத்தில் உங்கள் கணக்கு முடக்கப்படும்.
தபால் திணைக்களம் குறைந்தபட்ச தொகை வரம்பை ரூ.50 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தியுள்ளது. குறைந்தபட்ச தொகை குறைவாக இருந்தால், தபால் அலுவலகம் 100 ரூபாய் அபராதமாக வசூலிக்கும். கணக்கில் பூஜ்ஜிய இருப்பு இருந்தால், அது மூடப்படும். இருப்பினும், மகள்கள் சுகன்யா சம்ரிதி யோஜனா, PPF கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு மற்றும் மாதாந்திர வைப்புத் திட்டம் (MIS) ஆகியவற்றிற்கான கணக்குகளைத் திறப்பதற்கான விதிகளில் துறை எந்த மாற்றமும் செய்யவில்லை.
ஒரு கணக்கைத் திறக்க குறைந்தபட்ச தொகை 20 ரூபாய் என முன்னர் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தனிநபர் / கூட்டுக் கணக்குகள் 4.0% ஆண்டு வட்டி பெறுகின்றன. காசோலை இல்லாத வசதி கணக்கில் தேவைப்படும் குறைந்தபட்ச இருப்பு ரூ. 50 - ரூ.500 ரூபாயுடன் ஒரு கணக்கைத் திறக்க காசோலை வசதி உள்ளது. இதனால்தான் இதுபோன்ற கணக்கில் குறைந்தபட்சம் 500 ரூபாய் இருப்பு வைத்திருப்பது கட்டாயம் என தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக