Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 15 பிப்ரவரி, 2020

குடியுரிமை சட்ட விவகாரம்… சென்னையில் முஸ்லீம் அமைப்பினர் போராட்டம்… சாலை மறியல் செய்ததால் காவல்துறை தடியடி .. தமிழகத்தில் பரபரப்பு..

குடியுரிமை சட்ட விவகாரம்… சென்னையில் முஸ்லீம் அமைப்பினர் போராட்டம்… சாலை மறியல் செய்ததால் காவல்துறை தடியடி .. தமிழகத்தில் பரபரப்பு..




தேசிய குடியுரிமை சட்டத் திருத்தம், குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட மத்திய அரசின் ப்திய சட்டங்களை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாலை முதல் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த தர்ணா போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளும்  பல  மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து நிலையில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர்களை கலைந்து போகுமாறும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்று  காவல்துறையினர் எச்சரித்தனர். அதை கேட்க மறுத்ததால் அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல்துறையினர், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதாகவும்,
போராட்டக்காரர்கள் சிலரை அடித்து உதைத்ததாக  கூறி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த களேபரங்களுக்கு நடுவே சுமார் 120 பேரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்களை விடுதலை செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை தொடருவோம் என்று பிற போராட்டக்காரர்கள் வண்ணாரப்பேட்டை பகுதியில் அமர்ந்து விட்டனர்.
இது தொடர்பான வீடியோக்கள் வைரலாக பரவியது இதனால்  தமிழகம் முழுக்க இஸ்லாமிய அமைப்பினர் ஆங்காங்கு இரவோடு இரவாக  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் தலைவர்களுடன் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தை போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில்நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில்,  பிரச்சினை சுமூகமாக முடிந்தது. கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக