Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 19 செப்டம்பர், 2020

CSK - MI மோதலை விட இவங்க மோதல் பெருசா இருக்கும் போலருக்கே? IPL-ஐ வைத்து களமிறங்கும் கம்பெனிகள்!

போட்டி கடுமையாக அதிகரிப்பு

ஐபிஎல் தெறி விழா இதோ இன்னும் சில தினங்களில் தொடங்கப் போகிறது. ஆரம்பமே ஐபிஎல் கலை கட்டும் விதமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் அடித்துக் கொள்ளப் போகிறார்கள்.

தல தோனி தன் ஓய்வை அறிவித்த பிறகு, களம் இறங்கப் போகும் முதல் போட்டி என்பதால், இப்போதே ரசிகர்கள் பரபரத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

CSK - MI மோதலை போல, இந்தியாவின் டெலிகாம் சந்தையைப் பிடிக்க ஏர்டெல் & ஜியோ போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வொடாபோன் ஐடியா தன்னை நிலைபடுத்திக் கொள்ளும் வேலையில் இருக்கிறது.

போட்டி கடுமையாக அதிகரிப்பு

டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையில், வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கான போட்டி, ரிலையன்ஸ் ஜியோ வந்த பின் முழுமையாக வேறு ஒரு பரிமாணத்தைத் தொட்டு இருக்கிறது.

இப்போதும் ரிலையன்ஸ் ஜியோ என்ன செய்கிறது என்பதைப் பொருத்து தான் மற்ற இரண்டு கம்பெனிகள், தங்களின் ரீசார்ஜ் திட்டங்கள் தொடங்கி, வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சலுகைகள் வரை எல்லாமே தீர்மானிக்கப்படுகின்றன

600 ரூபாயில் மல்லுகட்டு

ஏர்டெல், விஐ (வொடாபோன் ஐடியா) 599 ரூபாய்க்கும், ரிலையன்ஸ் ஜியோ 598 ரூபாய்க்கும் ப்ரீ பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வைத்து இருக்கிறார்கள். ஆக 600 ரூபாய்க்குள் 3 கம்பெனி திட்டங்களும் இருக்கின்றன. இந்த திட்டங்களில் என்ன சலுகைகளைக் கொடுக்கிறார்கள். எத்தனை நாட்களுக்கு வேலிடிட்டி இருக்கிறது? ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க முடியுமா? என எல்லாவற்றையும் பார்ப்போம்.

Reliance Jio Rs 598 Recharge Plan

ரிலையன்ஸ் ஜியோவின் 598 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம், 56 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.

நாள் ஒன்றுக்கு 2 ஜிபி என்கிற கணக்கில் 112 ஜிபி டேட்டா கொடுக்கிறார்கள்.

ஜியோ டு ஜியோ அன்லிமிடெட் டாக் டைம்.

ஜியோ டு மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2,000 நிமிடங்கள் டாக் டைம் கொடுக்கிறார்களாம்.

நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ் வேறு கொடுக்கிறார்களாம்.

சப்ஸ்கிரிப்ஷன்

ஜியோவின் இந்த 598 ரூபாய் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில், ஜியோ அப்ளிகேஷன்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன்கள் இலவசமாம்.

இது போக, வாடிக்கையாளர்களின் கண்களை கவரும், 399 ரூபாய் மதிப்புள்ள, 1 வருட Disney + Hotstar சப்ஸ்கிரிப்ஷனை வேறு இலவசமாகக் கொடுக்கிறார்களாம். ஐபிஎல் ரசிகர்களுக்கு இது மாஸ் திட்டம் தான்

Bharti Airtel Rs 599 recharge plan

சுனில் மித்தல் நிர்வகிக்கும் பார்தி ஏர்டெல் கம்பெனி, 599 ரூபாய்க்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்திருக்கிறது. ஒரு ரூபாயில் என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது..?

இந்த திட்டத்துக்கும் வேலிடிட்டி 56 நாட்கள் தான்.

நாள் ஒன்றுக்கு 2 ஜி பி டேட்டா, அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ் கொடுக்கிறார்களாம்.

ஏர்டெல் சப்ஸ்கிரிப்ஷன்

ஏர்டெல்லும் ஐபிஎல் போட்டிகளை மனதில் வைத்து, 1 வருடத்துக்கான, 399 ரூபாய் மதிப்புள்ள Disney+ Hotstar VIP சப்ஸ்கிரிப்ஷனை இலவசமாகக் கொடுக்கிறார்கள்.

அது போக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், ஹலோ டியூன்கள், விங்க் மியூசிக், ஷா அகாடமி, 150 ரூபாய் Fastag கேஷ் பேக் போன்றவைகளைக் கொடுக்கிறது ஏர்டெல்.

Vi Rs 599 recharge plan

தன் வியாபாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள தடுமாறிக் கொண்டு இருக்கிறது வொடாபோன் ஐடியா. இவர்களும் 599 ரூபாய்க்கு ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்கள். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால்கள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ், web/app சிறப்புச் சலுகையாக 5 ஜிபி கூடுதல் டேட்டா என வைத்திருக்கிறார்கள். வொடாபோன் ஐடியாவின் இந்த திட்டம், ஜியோவுக்கோ அல்லது ஏர்டெல்லுக்கோ போட்டி போடும் விதத்தில் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!