Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 16 அக்டோபர், 2020

ஒரு ரூபாய் நாணயம் இருக்கா? உங்களுக்கு ரூ.25 லட்சம்!



உங்களிடம் பழைய ஒரு ரூபாய் நாணயம் இருக்கிறதா? அது இருந்தால் நீங்கள் ரூ.25 லட்சம் சம்பாதிக்கலாம். இது பொய் என்று நினைக்கிறீர்களா? உண்மைதான். இதற்கு ஒரு கண்டிசன் உள்ளது. அந்த நாணயம் குறைந்தது நூறு ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும். உங்களிடம் உண்மையில் அப்படி ஒரு நாணயம் இருந்தால் ரூ.25 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சந்தை நிறுவனமான இந்தியா மார்ட் பழங்காலப் பொருட்களுக்கான ஏலம் நடத்துகிறது. உங்களிடம் இதுபோன்ற பழங்கால, அரிய நாணயங்கள் இருந்தால் அவற்றை இந்த ஏலத்தில் வைக்கலாம்.


வெள்ளியால் செய்யப்பட்ட 1913ஆம் ஆண்டு ஒரு ரூபாய் நாணயத்தின் விலை ரூ.25 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1913 ஆம் ஆண்டு நாணயம் மட்டுமல்ல, உங்களிடம் இன்னும் இதுபோன்ற அரிய நாணயங்கள் இருந்தால் அவற்றை ஏலத்திற்கு வைக்கலாம். உங்களிடம் 18ஆம் நூற்றாண்டு நாணயம் இருந்தால், ரூ.10 லட்சம் கிடைக்கும். 1818ஆம் ஆண்டில் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் தயாரித்த நாணயத்துக்கு ரூ.10 லட்சம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த பழங்கால நாணயங்களில் மிகவும் அரிதானது அனுமன் உருவம் பொரிக்கப்பட்ட நாணயமாகும்.

உங்களிடம் பழங்கால மற்றும் அரிய நாணயங்கள் இருந்தால் அவற்றை விற்க விரும்பினால், நீங்கள் இந்தியா மார்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான IndiaMart.com என்ற முகவரில் பார்வையிட வேண்டும். முதலில் நீங்கள் இந்த தளத்தில் ஒரு கணக்கைத் திறக்க வேண்டும். நீங்கள் இதில் விற்பனையாளராக உங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செயல்முறை முடிந்ததும் உங்களிடம் உள்ள நாணயங்களை நீங்கள் பதிவேற்ற வேண்டும். பின்னர் அவற்றை விற்பனைக்கு வைக்கலாம். பண்டைய நாணயங்களைச் சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளவர்கள் இந்த ஏலத்தில் கலந்துகொண்டு பெரும் தொகையைக் கொடுத்து இந்த நாணயங்களை வாங்கிக் கொள்கிறார்கள். 

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!