Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 21 அக்டோபர், 2020

பட்ஜெட் விலையில் 2 ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் மைக்ரோமேக்ஸ்.!

அதைப் பற்றி சற்று

இந்தியா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய துணை பிராண்டான 'இன்' மூலம் நாட்டில் மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தைக்குள் நுழைய உள்ளது. பின்பு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா சமீபத்தில் ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, நிறுவனத்தின் புதிய "In" ஸ்மார்ட்போன்களின் வருகையை டீஸ் செய்தார்.

மேலும் இப்போது வரவிருக்கும் புதிய இன் ஸ்மார்ட்போன்களின் சில அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இதுவரை அதன் புதிய இன் ஸ்மார்ட்போன்களின் பெயர்களை வெளியிடவில்லை என்றாலும் கூட, அது நவம்பர் முதல் வாரத்தில் அதாவது தீபாவளிக்கு முன்னதாக இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

மேற்குறிப்பிட்ட தகவலானது, புதிய இன் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியை நன்கு அறிந்த வட்டாரங்களில் இருந்து தி மொபைல் இந்தியன் வலைத்தளத்திற்கு கிடைத்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெளியான லீக்ஸ் தகவல்களை பொறுத்தவரை, வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் ஒன்றானது, மைக்ரோமேக்ஸ் 1 ஏ என்று அழைக்கப்படலாம். பின்பு மீடியாடெக் ஹீலியோ ஜி 35 ப்ராசஸர், 6.5 இன்ச் அளவிலான எச்டி + டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி யூனிட் மற்றும் ஆண்ட்ராய்டு (அவுட் ஆப் பாக்ஸ்) ஓஎஸ் போன்ற பிரதான அம்சங்களை கொண்டு புதிய மைக்ரோமேக்ஸ் 1 ஏ ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மைக்ரோமேக்ஸ் 1a ஆனது 2 ஜிபி /3 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வெளியான 91 மொபைல்ஸ் அறிக்கையின்படி, இரண்டு மெமரி வகைகளும் வெவ்வேறு கேமரா சென்சார்களுடன் அறிமுகம் ஆகலாம். அதாவது 2 ஜிபி வேரியண்ட்டில் 13 மெகாபிக்கல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி லென்ஸ் இடம்பெறும் டூயல் ரியர் கேமரா அமைப்பு கிடைக்கக்கூடும்

அடுத்து 3ஜிபி மாடலில் 13 மெகாபிக்சல் லென்ஸ் + 5 மெகாபிக்சல் சென்சார் + 2 மெகாபிக்சல் லென்ஸ் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இடம்பெறலாம். முன்பக்கத்தில் ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கக்கூடும்.

இரண்டாவது மைக்ரோமேக்ஸ் இன் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி 85 ப்ராசஸர் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களின் விலைகளை பொறுத்தவரை ரூ.7000 முதல் ரூ.15,000 க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்க்படுகிறது.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!