Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 19 அக்டோபர், 2020

5ஜி ஸ்மார்ட்போனை ரூ.2,500-3,000 விலையில் விற்கப்போகிறதா ரிலையன்ஸ் ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி தொடர்

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.2,500-3,000 என்ற விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவல் குறித்து பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி தொடர்

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி தொடர் ஸ்மார்ட்போனை ரூ.5000-க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.2500 முதல் 3500 வரை நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

ரூ.5000 குறைவாக இருக்கும் 5ஜி சாதனம்

ஜியோ அறிமுகம் செய்யும் 5ஜி சாதனம் ரூ.5000-த்துக்கும் குறைவாக இருக்கும் எனவும் விற்பனை அளவீட்டை பொருத்து அதன் விலை ரூ.2500- ரூ.3000 வரை இருக்கும் என நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அதிகாரியின் பெயர் குறிப்பிடவில்லை. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.25,000-க்கு அதிகமாக இருக்கும் 5ஜி சாதனம்

இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ.25,000-க்கு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் 4ஜி போனை ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அறிமுகப்படுத்தியது. இதில் ஜியோ போனுக்கு திரும்பப்பெற கூடிய ரூ.1500 வைப்புத் தொகை மட்டுமே செலுத்த வேண்டியிருந்தது.

மலிவு விலையில் ஜியோ 5ஜி போன்

ஜியோ 5ஜி போன் மலிவு விலையில் அறிமுகப்படுத்துவன் நோக்கம் நாட்டில் 2ஜி இணைப்பு பயன்படுத்தும் 20-30 கோடி மொபைன் போன் பயனர்களை குறிவைப்பதே. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 43-வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி, 2ஜி முக்ட்(2ஜி இணைப்புகள் இல்லாதது) ஆக இந்தியாவை ஆக்குவதாக உறுதி அளித்தார்.

2ஜி அம்ச தொலைபேசி

5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியர்கள் காத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் 2ஜி அம்ச தொலைபேசியை பயன்படுத்தும் 350 மில்லியன் இந்தியர்கள் மலிவு விலை ஸ்மார்ட்போனுக்கு இடம்பெயரும் நடவடிக்கையை நாம் துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்கள்

கூகுள் மற்றும் ஜியோ இணைந்து குறைந்த விலையில் 5 ஜி ஸ்மார்ட் போன்கள் தயாரிக்க இருக்கிறது என அம்பானி அறிவித்தார். தற்போதைய நிலையின்படி 100 மில்லியன் ஜியோ போன்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கூகுள் மற்றும் ஜியோ இணைந்து ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும்படியான வலிமை மிக்க ஸ்மார்ட்போன்களை தயாரிக்க உள்ளதாக அம்பானி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!