Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 19 அக்டோபர், 2020

உலகின் முதல் 80W Mi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம்.. சியோமி செய்த புதிய சாதனை.!

பாஸ்ட் சார்ஜிங் சேவை

சியோமி நிறுவனம் இன்று அதன் அடுத்த தலைமுறை பாஸ்ட் சார்ஜிங் சாதனத்தை அறிமுகம் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. சியோமி நிறுவனம் புதிய 80W Mi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சியோமியின் 30W வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்திலிருந்து இது ஒரு மிகப் பெரிய பாய்ச்சல் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த புதிய பாஸ்ட் சார்ஜிங் சேவையை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மற்ற எந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் இதுவரை செய்திடாத புதிய சாதனையை சியோமி நிறுவனம் தற்பொழுது செய்துள்ளது.

80W Mi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் 4,000 mAh பேட்டரியை 1 நிமிடத்தில் 10% சார்ஜ் செய்கிறது, 8 நிமிடங்களில் 50% மற்றும் 19 நிமிடங்களில் 100% முழுமையாக சார்ஜ் செய்து முடிகிறது. சியோமி நிறுவனம், 2019ம் ஆண்டில் முதல் 30W Mi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இது பேட்டரியை சுமார் 25 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்கிறது, 69 நிமிடங்களில் 1 % ஆகவும் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.

80W Mi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் அறிமுகம் வயர்லெஸ் சார்ஜிங் துறையில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சார்ஜிங் களத்திலும் ஒரு புதிய மைல்கல்லை அமைத்துள்ளது என்று நம்பப்படுகிறது. பேட்டரியின் ஆயுள் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதன் மூலமும், ஸ்மார்ட்போன்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பாஸ்ட் சார்ஜ் செய்வதன் மூலமும் சியோமி நிறுவனம் இந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளது.

மார்ச் 2020 இல், சியோமி உலகிற்கு 40W வயர்லெஸ் சார்ஜிங்கை அறிமுகப்படுத்தியது. ஆகஸ்டில், சியோமியின் முதல் 50W வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது, இப்பொழுது சியோமி நிறுவனம் 80W Mi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் அதன் முந்தைய சாதனையை மீண்டும் முறியடித்துள்ளது. ஒரு வருடத்திற்குள், மூன்று தொழில்நுட்ப முன்னேற்றங்களை சியோமி செய்துள்ளது.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!