Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 21 அக்டோபர், 2020

பட்ஜெட் விலையில் புதிய நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் அறிமுகம்.!

நோக்கியா எசென்ஷியல்

நோக்கியா நிறுவனத்தின் எசென்ஷியல் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் ஆனது ஓவர் இயர் வடிவமைப்பு மற்றும் 40 மிமீ டைனமிக் டிரைவர்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த ஹெட்ஃபோன்களில் ஒரு உள்ளமைக்கப்பட்ட பேட்டரியும் உள்ளது. இது ஒரு சார்ஜில் 40 மணிநேர ஆடியோ பேளேபேக்கை வழங்குவதாக மதிப்பிடப்படுகிறது.

குறிப்பாக புதிய நோக்கியா எசென்ஷியல் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் உலகளாவிய வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆதரவுடன் வருகின்றன. பின்பு இது கூகுள் அசிஸ்டென்ட் அல்லது சிரியுடன் தொடர்பு கொள்ள உங்களை அனுமதிக்கிறது.

நோக்கியா எசென்ஷியல் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் ஐரோப்பாவில் அறிமுகமாகி உள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.5,100-ஆக உள்ளது. மேலும் இந்த ஆண்டு நவம்பர் முதல் உலகளவில் விற்பனைக்கு வர உள்ளன. இந்த புதிய ஹெட்ஃபோன்ஸ் ஆனது கருப்பு நிறத்தில் மட்டுமே வருகின்றன.

நோக்கியா எசென்ஷியல் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் ஆனது 40 மிமீ டைனமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளன, அவை 20 ஹெர்ட்ஸ் மற்றும் 20,000 ஹெர்ட்ஸ் இடையே ப்ரெக்வன்சி ரெஸ்பான்ஸ் வரம்பைக் கொண்டுள்ளன. மேலும் இந்த ஹெட்போன்ஸ் மடிக்கக்கூடிய ஹெட் பேண்டுடன் வருகின்றன.

நோக்கியா எசென்ஷியல் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் வயர்லெஸ் இணைப்பிற்காக ப்ளூடூத் 5.0 ஐ ஆதரிக்கின்றன. இருப்பினும் ஒரு வயர்டு பிளேபேக் அனுபவத்தை இயக்க 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் கிடைக்கிறது. இந்த புதிய நோக்கியா ஹெட்ஃபோன்ஸ் சார்ஜ் செய்ய மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்டையும் கொண்டுள்ளது.

நோக்கியா உரிமதாரர் ஆன எச்எம்டி குளோபல் நிறுவனம் இதில் 500 எம்ஏஎச் பேட்டரியை வழங்கியுள்ளது. மேலும் இது 40 மணி நேரம் கேட்கும் நேரத்தை வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பின்பு மூன்று மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யவும் முடியும்.

மேலும் ஒரு வசதியான அனுபத்தை வழங்க, இந்த ஹெட்போனில் மென்மையான இயர் பட்ஸ் உடன் ஒரு அனோடைஸ் அலுமினியம் அவுட்டர் கவர் உள்ளது.

பின்பு பயணங்களின் போது குறிப்பிட்ட பாதைகள் அல்லது திசைகளைப் பெற இந்த வயர்லெஸ் ஹெட்ஃபோனில் இருக்கும் கூகுள் அசிஸ்டென்ட் அல்லது சிரியை நீங்கள் நேரடியாக இயக்கலாம். மேலும் இந்த ஹெட்ஃபோன்ஸ் 197 கிராம் எடையை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!