🌟 ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரனுடன் புதன் நட்பு என்ற நிலையில் நின்று அருளவிருக்கும் சுப மற்றும் அசுப பலன்களை நாம் காண்போம்.
🌟 கலைகளில் உள்ள பல நுணுக்கமான விஷயங்களை அறிந்தவர்கள்.
🌟 எதிலும் எச்சரிக்கை உணர்வு உடையவர்கள்.
🌟 சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்லக்கூடியவர்கள். குடும்பத்தின் மீது மிகுந்த அக்கரையும், இனிமையான கட்டுப்பாட்டையும் உடையவர்கள்.
🌟 பொதுநலத்துடன் செயல்படக்கூடியவர்கள்.
🌟 மாமன், அத்தை உறவுமுறைகளால் அனுகூலமான பலன்கள் அடையக்கூடியவர்கள்.
🌟 பிறரை ஏமாற்றுவதையோ, பிறரிடம் ஏமாறுவதையோ விரும்பமாட்டார்கள்.
🌟 மற்றவர்களை எளிதில் கவரும் தோற்றம் கொண்டவர்கள்.
🌟 மற்றவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு அறிந்தவர்கள்.
🌟 அனைவரையும் கவரக்கூடிய பேச்சுத்திறமை உடையவர்கள்.
🌟 மற்றவர்களின் மனம் புண்படாதவாறு தனது காரியத்தை சாதிக்கக்கூடியவர்கள்.
🌟 திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள்.
🌟 கணிதத்தில் புலமை உடையவர்கள்.
🌟 எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும், அதிக நினைவாற்றலையும் உடையவர்கள்.
🌟 எதையும் கவனிக்காதது போல் இருப்பார்கள். ஆனால், அனைத்தையும் கவனிக்கக்கூடியவர்கள்.
🌟 அறுசுவை உணவு உண்பதில் அலாதி விருப்பம் உடையவர்கள்.
🌟 வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதில் விருப்பம் உடையவர்கள்.
🌟 குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
🌟 கொள்கை பிடிப்பு குணமும், வாக்கு தவறாமையும் உடையவர்கள்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக