
இந்திய வான்வெளியில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வான்வழி பாதைகளை பயணிகள் விமான சேவைகளுக்கு திறந்துவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்திய
வான்வெளியில் பயணிகள் விமானம், தனியார் சுமைதாங்கி விமான சேவைகளுக்கு 60 சதவீதம்
வான்வழி பாதைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மீத 40 சதவீத பகுதிகள் இந்திய
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்திய விமானப்படை விமானங்கள் பறப்பதற்கு
மட்டுமே அந்த பாதைகளில் அனுமதி உண்டு.
இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக பயணிகள் விமான சேவைகள் மற்றும் நிறுவனங்கள்
முடக்கம் கண்டுள்ளதால், ராணுவத்திற்கு உட்பட்ட விமான பாதையில் 10 சதவீதத்தை
பயணிகள் விமானங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பயணிகள் விமான போக்குவரத்து சுலபமாகும் என்பதோடு விமான
நிறுவனங்களுக்கான எரிபொருள் செலவும், பயணிகளுக்கு டிக்கெட் செலவும் குறையும் என்று
கூறப்பட்டுள்ளது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக