------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!
------------------------------------------------
அமலா : புகுந்த வீட்டுல பெண்கள மதிக்க மாட்டேங்குறாங்க.
விமலா : என்ன செய்றாங்க?
அமலா : மாமியார், மருமகள் சண்டைக்கு வாய்ப்பு கொடுக்காம எந்நேரமும் அப்பாவும், மகனும் சண்டை போடுறாங்க.
விமலா : 😂😂
------------------------------------------------
கணவன் : டானிக் சாப்பிடும்போது ஏன் ரூம் கதவை மூடுறீங்க?
மனைவி : டாக்டர்தான் அரை(றை) மூடி டானிக் குடிக்க சொன்னாரு.
கணவன் : 😳😳
------------------------------------------------
மாற்றம்...!!
------------------------------------------------
⭐ மகனின் மாற்றத்தை திருமணத்திற்கு பின் உணரலாம்...
⭐ மகளின் மாற்றத்தை வாலிப வயதில் உணரலாம்...
⭐ கணவனின் மாற்றத்தை மனைவி நோய்வாய் படுதலில் உணரலாம்...
⭐ மனைவியின் மாற்றத்தை கணவனின் வறுமையில் உணரலாம்...
⭐ நண்பனின் மாற்றத்தை கஷ்ட காலத்தில் உணரலாம்...
⭐ சகோதரனின் மாற்றத்தை சண்டையில் உணரலாம்...
⭐ சகோதரியின் மாற்றத்தை சொத்து பரிமாற்றத்தில் உணரலாம்...
⭐ பிள்ளைகளின் மாற்றத்தை நமது முதுமை காலத்தில் உணரலாம்...
------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
------------------------------------------------
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
விளக்கம் :
மறந்தும்கூட மற்றவருக்கு கேடு செய்ய நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டுவிடும்.
------------------------------------------------
இது சிரிக்க மட்டுமே..!!
------------------------------------------------
😋 ஜலதோஷம் கூட நம்மகூட ஒருவாரம் தங்குது...
ஆனா இந்த சந்தோஷம்தான் வந்த உடனே போயிடுது!
😋 மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே,
பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்.
😋 ஆனால் பெண்வீட்டில் பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே,
மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்க...!
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்பொழுதுபோக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக