Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 16 அக்டோபர், 2020

கொரோனா பரிசோதனையில் இந்தியாவின் 'FELUDA' ஒரு Game Changer ஆக இருக்குமா..!!!

 கொரோனா பரிசோதனையில் இந்தியாவின் 'FELUDA' ஒரு Game Changer ஆக இருக்குமா..!!!

கொரோனாவிற்கு எதிராக இந்தியா நடத்தும் போரில்,  இந்தியாவிற்கு வலுசேர்க்கும் வகையில்,  இந்திய விஞ்ஞானிகள் காகித அடிப்படையிலான டெஸ்ட் ஸ்ட்ரிப் ஃபெலுடாவை உருவாக்கியுள்ளனர். இந்தியாவின் 'ஃபெலுடா'  விரைவில் சந்தைக்கு வர உள்ளது. இது கொரோனா பரிசோதனையின் நேரத்தையும் செலவையும் பெரிய அளவில் குறைக்கும்  என நம்பப்படுகிறது. 

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (Drugs Controller General of India) கடந்த மாதம் நடத்திய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தர அளவுகோல் பரிசோதனைக்கு, பின்னர் ஃபெலுடா (FnCas9 Editor Linked Uniform Detection Assay -FELUDA ) என்னும் கொரோனா பரிசோதைக்கான பேப்பர் ஸ்ட்ரிப்பிற்கு ஒப்புதல் அளித்தது. பெலூடா விரைவில் சந்தையில் கிடைக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சில காலத்திற்கு முன்பு கூறினார்.

இதை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) இளம் விஞ்ஞானிகள் குழு தயாரித்துள்ளது. FELUDA மூலம் நடத்தும் பரிசோதனையில், சோதனை முடிவுகளை சில நிமிடங்களில் பெறலாம். தற்போதைய RT-PCR கிட்  மூலம் நடத்தப்படும் சோதனையில் இதற்கு 4 முதல் 5 மணி நேரம் ஆகும். CSIR-ன் தலைமை இயக்குநர் சேகர் சி மண்டே கூறுகையில், ஃபெலுடா மூலம் நடத்தப்பட பரிசோதனையில் பரிசோதனை முடிவை 30 நிமிடங்களீல் தெரிந்து கொள்ளலாம் என்கிறார். மேலும், ஃபெலுடா பரிசோதனை கிட் என்பது  RT-PCR டெஸ்ட் கிட்டை விட மூன்று முதல் ஐந்து மடங்கு மலிவானது.

COVID-19 சோதனைக்காக உருவாக்கப்பட்ட ஃபெலுடா கிட் என்பது, கர்ப்பம் உள்ளதா என்பதை மிக எளிதாக சோதிக்கும் பேப்பர் ஸ்ட்ரிப் பரிசோதனைக்கு ஒத்ததாகும். இட்தனை யாரும் எளிதாக பய்னபடுத்தலாம். இந்த கிட் உதவியுடன் கிராமங்கள் போன்ற அதிக வசதிகள் இல்லாத இடத்தில் கூட எளிதில் சோதிக்க முடியும். ஏனெனில், ஆர்டி பி.சி.ஆர் கிட் பரிசோதனைக்கு ஏராளமான சாதனங்கள் தேவைப்படுகின்றன. ஃபெலூடாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அது குறுகிய காலத்தில் துல்லியமான முடிவுகளைத் தருகிறது.

மூத்த விஞ்ஞானி டாக்டர் டெபோஜோதி சக்ரவர்த்தி கூறுகையில்,  இந்த பேப்பர் ஸ்ட்ரிப்பில், Cas9 புரதம் பார்கோடு செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் நோயாளியின் மரபணு பொருளில் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை கண்டறிய முடியும். இந்த காகித ஸ்ட்ரிப்பில்  இரண்டு கோடுகள் உள்ளன, அவை சம்பந்தப்பட்ட நபருக்கு COVID-19 உள்ளதா என்பதை எடுத்துரைக்கிறது என்றார். 

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!