Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 16 அக்டோபர், 2020

Paytm Wallet தொடர்பாக மாற்றப்பட்டுள்ள முக்கிய விதியின் விபரம் உள்ளே..!!!

Buy Paytm Mall All In One Qr (Set Of 2) With 1 Standee Online at Low Prices  in India - Paytmmall.com

Paytm என்பது பண பரிவர்த்தனைக்காக இந்தியாவில் மிக அதிகம் பயன்படுத்தப்படும் முறையாக உள்ளது. காய்கறி விற்பது முதல், பெரிய அளவிலான பரிவர்த்தனை வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இப்போது Paytm Wallet ஐப் பயன்படுத்த, நீங்கள் இன்னும் கொஞ்சம் பணம் செலுத்த தயாராக இருங்கள்.

மளிகைக் கடைகளிலிருந்து பொருட்களை வாங்க, காய்கறி வாங்க, தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்கள், புத்தகம் வாங்குதல், எரிவாயு சிலிண்டர்கள்,மொபைல் ரீசார்ஜ்  செய்தல், மற்றும் டி.டி.எச் அல்லது ஆன்லைன் ஆர்டர்கள் என சகலவிதமான சிறிய மற்றும் பெரிய அளவிலான பரிவர்த்தனைக்கு பலர் Paytm Wallet ஐப் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் Paytm ஐப் பயன்படுத்துவதற்கு இன்று (அக்டோபர் 15) முதல் நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டும்.

Paytm இல் கிரெடிட் கார்டில் பணத்தைச் சேர்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

கிரெடிட் கார்டிலிருந்து Paytm Wallet -ல் பணத்தை போட அக்டோபர் 15 முதல் 2% கட்டணம் வசூலிக்கப்படும்

இப்போது வரை கிரெடிட் கார்டிலிருந்து Paytm Wallet க்கு பணத்தை போடுவதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. ஆனால் இப்போது நிறுவனம் விதிகளை மாற்றிவிட்டது.

Paytmbank.com இல் கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, அக்டோபர் 15, 2010 முதல், ஒரு நபர் கிரெடிட் கார்டிலிருந்து Paytm Wallet க்கு பணத்தை போடுவதற்கு  2 சதவீத கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த 2 சதவீத கட்டணத்தில் ஜிஎஸ்டியும் அடங்கும். உதாரணமாக, நீங்கள் கிரெடிட் கார்டுடன் ஒரு பேடிஎம் வாலெட்டில் நீங்கள் 100 ரூபாய் சேர்த்தால், உங்கள் கிரெடிட் கார்டிலிருந்து 102 ரூபாய் செலுத்த வேண்டும். முன்னதாக இந்த விதி அக்டோபர் 9 முதல் செயல்படுத்தப்பட இருந்தது.

இருப்பினும், இந்நிறுவனம் தற்போது கிரெடிட் கார்டில் இருந்து Paytm இல் பணம் போடுவதற்கு 1 சதவீத கேஷ்பேக் அளிக்கிறது.

எனினும், வேறு எந்த தளத்திலும் Paytm Wallet க்கு மாற்றும்போது கூட கட்டணம் ஏதும் இருக்காது. நீங்கள் டெபிட் கார்டு அல்லது நெட்பேங்கிங் மூலம் Paytm வாலெட்டில் பணத்தை சேர்த்தாலும் கட்டணம் ஏதும் இருக்காது.

1 ஜனவரி 2020 அன்று, நிறுவனம் விதிகளையும் மாற்றியது. முன்னதாக, விதிகள் 1 ஜனவரி 2020 அன்று மாற்றப்பட்டன. இப்போது வரை, ஒரு பயனர் ஒரு மாதத்தில் 10 ஆயிரம் ரூபாய் வரை கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை சேர்தால், அவர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், ரூ .10,000 க்கு மேல் பணம் சேர்ப்பதற்கு அவர் 2 சதவீத கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இப்போது அக்டோபர் 15 முதல், கிரெடிட் கார்டிலிருந்து,  Paytm பவாலெட்டில் சேர்க்கும் எந்த அளவிலான தொகைக்கும், நீங்கள் 2 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!