
புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் M2007J3SC என்ற மாடல் எண்ணைக் கொண்ட Redmi K30S ஸ்மார்ட்போன் TENAA இணையதள பக்கத்தில் காணப்பட்டுள்ளது. இது வரவிருக்கும் Redmi K30S ஸ்மார்ட்போனின் மாதிரி என்று கூறப்படுகிறது. இந்த பட்டியல் ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்புகள் மற்றும் படங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள பட்டியலின் படி, Redmi K30S என்பது ஷியோமி மி 10T இன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பதிப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமீபத்தில் உலகளாவிய சந்தைகளிலும் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய மாடல் 1080x2400 பிக்சல்கள் கொண்ட 6.67' இன்ச் முழு எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது என்று TENAA செய்தி தகவல் கூறியுள்ளது.
Redmi K30S ஸ்மார்ட்போன் மாடலானது 2.84GHz ஆக்டா கோர் சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய குறிப்பாக இதில் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதேபோல், இந்த போனில் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் கேமராவைக் கொண்டுள்ளது. இவை Mi 10T இன் அதே கேமரா விவரங்களுடன் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி ஸ்மார்ட்போன் 4,900 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. Redmi K30S ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், ப்ளூ, பிங்க், வைட், க்ரீன், பர்பிள் மற்றும் க்ரெய் வண்ணங்களில் வரும் என்பதை TENAA செய்தி பட்டியல் வெளிப்படுத்துகிறது. விலை பற்றிய விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக