Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும்.. அது என்ன? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

-----------------------------------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!! 

-----------------------------------------------------------------------------

தங்கமணி : மாப்பிளைக்கு பெரிய பேக்ரவுண்ட் இருக்குதுன்னு தரகர் சொன்னதை நம்பி பெண்ணை கல்யாணம் பண்ணி வச்சது தப்பா போயிடுச்சி.

முத்துமணி : ஏங்க என்னாச்சி?

தங்கமணி : அட நீங்க வேற! மாப்பிளை தலைக்கு பின்னால இருக்குற வழுக்கையைத்தான் அப்படி சொல்லி இருக்காரு.!!

முத்துமணி : 😆😆

-----------------------------------------------------------------------------

அருண் : டேய்! ஏன்டா ஃபேனை ஆப் பண்ணிட்ட?

வருண் : எங்கப்பாதான் சொல்லி இருக்காரு, வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!

அருண் : 😜😜

-----------------------------------------------------------------------------

விடுகதைகள்...!!

-----------------------------------------------------------------------------

1. காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது. அது என்ன?

முட்டை 

2. காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு. அது என்ன?

சேவல்

3. அந்தரத்தில் தொங்குவது சொம்பும், தண்ணீரும். அது என்ன?

இளநீர் 

4. கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள். அவள் யார்?

காலிங்பெல்

5. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும். அது என்ன?

தீபம் 

-----------------------------------------------------------------------------

பாரதியார் பாடல்கள்...!!

-----------------------------------------------------------------------------

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி

பிறப்பித்தேன்;அதற்குரிய வெற்றி கேளீர்;

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்

மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே!

விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்

விடுதலையென் பீர், கருணை வெள்ள மென்பீர்,

பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்

பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.

-----------------------------------------------------------------------------

இன்றைய கடி...!!

-----------------------------------------------------------------------------

மரியாதைக்குரிய மீன் எது?

.

.

.

.

.

திருக்கை மீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக