Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 31 மே, 2021

SBI பயனர்களின் கவனத்திற்கு: பணம் எடுக்கும் முறையில் புதிய மாற்றம்.. ATM சேவைக்கு GST உடன் கட்டணம்..

COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) Non-home branch என்ற ஹோம் ப்ரான்ச் அல்லாத கிளைகளில் இருந்து வாடிக்கையாளர்களால் பணத்தைப் பெறுவதற்கான உச்சவரம்பை SBI தற்பொழுது அதிகரித்துள்ளது. 

இந்த தொற்றுநோய் காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க, எஸ்பிஐ காசோலை மற்றும் வித்ட்ரா படிவத்தின் மூலம் ஹோம் பிரான்ச் அல்லாத கிளைகளில் இருந்து பணத்தைப் பெறும் வரம்பை அதிகரித்துள்ளது என்று வங்கி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

Non-home branch என்றால் என்ன? home branch என்றால் என்ன?

முதலில் Non-home branch என்றால் என்ன? மற்றும் home branch என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டால் உங்களின் சந்தேகங்களுக்குச் சரியான விடைகள் கிடைத்துவிடும். 'ஹோம்' கிளை என்றால் வாடிக்கையாளர்களின் கணக்குகள் பராமரிக்கப்படும் இடமாகும். இது நம்மில் உள்ள பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும் விஷயமே.

SBI வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

அதேபோல், ஹோம் பிரான்ச் கிளை தவிர மற்ற கிளைகளில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் வங்கி வசதிகள் தான் ஹோம் பிரான்ச் அற்ற கிளை (Non-home branch) என்று அழைக்கப்படுகின்றது.

SBI வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, காசோலையைப் பயன்படுத்தி சுயமாகப் பணத்தை வித்ட்ரா செய்யும் முறையை 1 நாளைக்கு ரூ.1 லட்சம் என்று வங்கி தற்பொழுது உயர்த்தியுள்ளது..

சேமிப்பு கணக்கு பாஸ்புக்கை பயன்படுத்தி பணம் எடுக்கும் முறையில் புதிய மாற்றம் என்ன?

SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் அவர்களின் சேமிப்பு கணக்கு பாஸ்புக்கை பயன்படுத்தி சுயமாகப் பணத்தை திரும்பப் பெறும் முறையிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன் படி, பணத்தை வித்ட்ரா செய்யும் படிவத்தைப் பயன்படுத்தி, உரிய வாடிக்கையாளர் பாஸ்புக் உடன் ஒரு நாளைக்கு ரூ. 25,000 வரை பணம் எடுப்பதற்கான வசதி தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ளது.

மூன்றாம் தரப்பு பயனர்கள் பணத்தை வித்ட்ரா செய்ய என்ன செய்ய வேண்டும்?

மேலும், மூன்றாம் தரப்பு பயனர்கள் பணத்தை வித்ட்ரா பெறுவதற்கு மாதத்திற்கு ரூ. 50,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவும், இந்த மூன்றாம் தரப்பு பயனர்கள் காசோலையைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று SBI தெரிவித்துள்ளது. 

இந்த பயனர்கள் அவர்களின் KYC சார்ந்த படிவங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது. பணத்தை வித்ட்ரா செய்யும் படிவத்தைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பு பயனர்களுக்கு பணம் வழங்கப்படமாட்டாது.

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் பரிவர்த்தனைக்கு GST உடன் கட்டணம்

இந்த திருத்தப்பட்ட விதிகள் செப்டம்பர் 30, 2021 வரை செல்லுபடியாகும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல், SBI அதன் இணையதளத்தில் சமீபத்திய எஸ்பிஐ பணம் எடுக்கும் கட்டணங்களின்படி, ஒரு கிளை சேனல் அல்லது ஏடிஎம்மில் பணம் எடுக்கும் பரிவர்த்தனைக்கு வங்கி ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணத்தை வசூலிக்கிறது. 4 இலவச பணம் எடுக்கும் பரிவர்த்தனைக்கு அப்பால், எஸ்பிஐ மற்றும் எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வரம்புக்கு அப்பால் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!