Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 2 ஜூன், 2021

ஆண்டவன் கொடுத்த பத்து ரூபாய்... முழுவதும் கிடைத்ததா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
பைத்தியம் பிடித்த ஒருவன் ஒரு மின் கம்பத்தைச் சுற்றிக்கொண்டே, 'ஆண்டவனே, எனக்கு பத்து ரூபாய் கொடு," என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.

அவ்வழியே போன ஒருவர் அவன் மீது இரக்கப்பட்டு ஐந்து ரூபாய் கொடுத்துச் சென்றார்.

மறுநாள் மீண்டும் அவர் அப்பாதை வழியாக வரும்போது அந்தப் பைத்தியக்காரன் முன்போலவே, 'ஆண்டவனே, எனக்குப் பத்து ரூபாய் கொடு," என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

இவரைப் பார்த்தவுடன் அவன் உரக்க, 'ஆண்டவனே, இம்முறை நீயே நேரடியாக பத்து ரூபாய் கொண்டு வந்து கொடு.

நேற்று நீ பத்து ரூபாய் கொடுத்து அனுப்பிய ஆள் ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு ஐந்து ரூபாய் தான் என்னிடம் கொடுத்தான். மகா திருடன்." என்று கூவினான்.

வந்தவர் : 😳😣😩
-------------------------------------
திருக்குறள் அதிசயங்கள்...!!
-------------------------------------
📗 திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை

📗 திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்

📗 திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி

📗 திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள

📗 திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்

📗 திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்

📗 திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து - னி

📗 திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் - ளீ, ங

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!