Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 4 ஜூன், 2021

இந்தியா மீதான வரியை நீக்கிய அமெரிக்கா.. ஜோ பைடன் முடிவு.. டிஜிட்டல் சேவை வரி விவகாரம்..!

இந்திய அரசு வெளிநாட்டு இண்டர்நெட் நிறுவனங்கள் இந்தியாவில் செய்யும் வர்த்தகம் மற்றும் சேவை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்க முடிவு செய்தது, இந்தியாவின் இந்த முடிவை எதிர்த்து அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எதிராக வரி விதித்தது.

 இந்திய உட்படப் பல நாடுகள் டிஜிட்டல் சேவை வரி என்ற பெயரில் வரியை விதித்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா உட்பட 6 நாடுகள் மீது அமெரிக்கா வரி விதித்தது. 

இந்த வரியைத் தான் தற்போது அமெரிக்கா அரசு 180 நாட்களுக்கு ரத்து செய்துள்ளது. 

அமெரிக்கா தீவிரம் 

இதற்கான தீர்வை எட்டுவதில் அமெரிக்கா மிகவும் தீவிரமாக உள்ளது, இதற்கு முக்கியக் காரணம் டிஜிட்டல் சேவை தளத்தில் உலகளவில் அமெரிக்க நிறுவனங்கள் தான் அதிகளவிலான வர்த்தகத்தைச் செய்து வருகிறது.

 வரி வருமானம்

வரி வருமானம் பாதிப்பு அமெரிக்க நிறுவனங்கள் அந்தந்த நாடுகளில் செய்யும் வர்த்தகத்திற்கு அங்கேயே வரியைச் செலுத்திவிட்டால் அமெரிக்காவிற்குக் கிடைக்கும் வரி வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்படும் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கவே அமெரிக்க அரசு எதிர் வரியும், தற்போது ஆலோசனை செய்வதற்காக வரியை ரத்தும் செய்துள்ளது. 

6 நாடுகள்

6 நாடுகள் மீது வரி அமெரிக்க அரசு இந்தியா மட்டும் அல்லாமல் ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்பெயின், துருக்கி, பிரிட்டன் ஆகிய நாடுகள் மீதும் எதிர் வரியை விதித்தது. 

கடந்த ஜூன் மாதம் வரியை விதித்த நிலையில் ஒரு வருட கால முடிவடைந்துள்ளது. 

குற்றச்சாட்டு, ஆலோசனை

குற்றச்சாட்டு மற்றும் ஆலோசனை தற்போது இந்த 6 நாடுகளும் சர்வதேச வரி விதிப்புச் சட்டங்களுக்கு எதிராக வரி விதித்துள்ளது என்று அமெரிக்க அரசு குற்றம்சாட்டி அதற்கான ஆலோசனைகள் தற்போது நடந்து வருகிறது. 

 இந்தியாவின் வரி

இதில் இந்தியா விதித்த 2 சதவீத டிஜிட்டல் சேவை வரி அமெரிக்க நிறுவனங்களைத் திட்டமிட்டுப் பாதிக்கக் கூடியதாக உள்ளது என அமெரிக்க ஜனவரி 6ஆம் தேதி அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!