-----------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!
-----------------------------
ரமேஷ் : திருடப் போகும்போது ஏன் பொம்பளை மாதிரி வேஷம் போட்டுக்குற?
சுரேஷ் : மாட்டிக்கிட்டா பெண் கைதிகள் இருக்கிற சிறையில் அடைப்பாங்களே! அதான்
ரமேஷ் : 😅😅
பாபு : அவன்தான் அவங்க வீட்டுல கதவுமாதிரி.
கோபு : வீட்டுக்குத் தூண்மாதிரின்னு கேள்விப்பட்டிருக்கேன். அது என்னடா கதவுமாதிரி?
பாபு : அவன வீட்ல யார்வேணா சாத்து சாத்துன்னு சாத்துவாங்க!
கோபு : 😜😜
-----------------------------
இன்றைய கடி...!!
-----------------------------
வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த அப்பாவும், மகனும் சட்டத்தோடு போராடினர். எப்படி?
.
.
.
.
.
அப்பா தச்சர்👨🏭
மகன் வழக்கறிஞர்👨⚖️
-----------------------------
அட அப்படியா?
-----------------------------
👐 நம் கையில் மிக முக்கியமான விரல் எதுவென்றால் அது சுண்டுவிரல். இது மிகச்சிறிய விரலாக இருந்தாலும் இதன் உதவி இல்லாமல் எந்த வேலையையும் செய்ய இயலாது. நமது கைக்கு 50 சதவீத உறுதி சுண்டுவிரலால்தான் கிடைக்கிறது. இதற்கு நீங்களே சோதனை செய்து பாருங்களேன். எந்த வேலை செய்தாலும் சுண்டுவிரலை மடக்கி வைத்துக்கொண்டு செய்து பாருங்கள்.
-----------------------------
குறளும்... பொருளும்...!!
-----------------------------
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
பொருள் :
அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
-----------------------------
பயனுள்ள டிப்ஸ்...!!
-----------------------------
🌟 பலகாரம் செய்ய எண்ணெய் காய வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.
🌟 சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போகாமல் இருக்கும்.
🌟 சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது... நீர்த்தும் போகாது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக