Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 3 ஜூன், 2021

BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு Good News, இந்த திட்டங்களில் புதிய மாற்றம்


பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை வெளியிட்டு வருகின்றனர். ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக தற்போது பிஎஸ்என்எல் நிறுவனமும் பல மலிவான திட்டங்களை அறிவித்து வருகிறது.

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.499 மற்றும் ரூ.198 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த திட்டங்களில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் கண்டிப்பாக பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். 

பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டதில் முன்பு 45 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி இருந்தது, தற்போது 50 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தினசரி 2ஜிபி டேட்டா, இலவச அழைப்பு நன்மைகள் இந்த ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் பிஎஸ்என்எல் ட்யூன்களுக்கு பதிலாக இலவச லோக்தூன் உள்ளடக்கத்துடன் வருகிறது.

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டதில் முன்பு 1ஜிபி டேட்டா நன்மையை மட்டுமே இருந்தது, தற்போது இந்த திட்டததில் 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 180ஜிபி டேட்டா நன்மையை பெற முடியும். இதுதவிர இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தா மற்றும் ஜிங் மியூசிக் பயன்பாட்டு சந்தாவை இந்த திட்டத்தில் பெறமுடியும். மேலும் இலவச வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!