Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 31 ஜூலை, 2021

சிரிப்பின் தன்மையை வைத்து.. மனிதர்களின் பண்பை அறியலாம் வாங்க - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


-------------------------------------------
சிரிக்கலாம் வாங்க....!!
-------------------------------------------
ஹோட்டல் ஓனர் : என்னயா ஒரே ரவுடிங்களா வந்திருக்கீங்க?
ராமு : நீ தானய்யா போர்டு வச்சுருக்க.
ஹோட்டல் ஓனர் : என்னானு?
ராமு : சாப்பாடு பிடிச்சுருந்தா நண்பன கூட்டிட்டு வா! இல்லைனா விரோதிய கூட்டிட்டு வா! அப்படினு... அதான், என்னோட விரோதிங்க எல்லாத்தையும் கூட்டிட்டு வந்திருக்கிறேன்..
ஹோட்டல் ஓனர் : 😮😮
-------------------------------------------
கணேஷ் : டேய்! நாளைக்கு ஒரு பெண் பாக்கப் போறேன்! வந்துரு!
பிரவீன் : கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம்னா நான் சும்மா இருப்பேனா?
கணேஷ் : 😜😜
-------------------------------------------
தமிழ் சொற்கள்..!!
-------------------------------------------
இங்கிதம் - குறிப்பு, குறிப்பறிதல்

இதிகாசம் - மறவனப்பு

இந்திரன் - வேந்தன்

இந்தியா - நாவலம்

இந்துக்கள் - தென் மதத்தார்

இமயமலை - பனிமலை

-------------------------------------------
சிரிப்பின் தன்மையும்... மனிதர்களின் பண்பும்..!!
-------------------------------------------
வெற்றியில் சிரிப்பவன் வீரன்.

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.

துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

மகிமையில் சிரிப்பவன் மன்னன்.

விளையாமல் சிரிப்பவன் வீணன்.

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.

கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.

ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.

தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.

கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.

நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.

தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி.

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.

நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.

தற்பெருமையில் சிரிப்பவன் கோழை.

சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்.

நிலை மறந்து சிரிப்பவள் காதலி.

காதலால் சிரிப்பவள் மனைவி.

அன்பால் சிரிப்பவள் அன்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!