Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 29 ஜூலை, 2021

கொசுக்களின் பாலினத்தை இப்படித்தான் கண்டுபிடிக்கணும் போல... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------
சரவெடி காமெடி....!!
--------------------------------------

மனைவி : ஏங்க.. என்ன செய்றீங்க?
கணவன் : கொசுக்களை கொன்னுட்டு இருக்கேன்.
மனைவி : எத்தனை கொசுக்களைக் கொன்னீங்க?
கணவன் : மொத்தம் 5, அதில் 2 பெண் கொசு, 3 ஆண் கொசு..
மனைவி : கொசுக்களின் பாலினம் உங்களுக்கு எப்படித் தெரியும்?
கணவன் : 2 கண்ணாடியில இருந்துச்சி, 3 மதுபானம் பக்கத்தில் இருந்துச்சி..
மனைவி : 😂😂
--------------------------------------
பாபு : சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?
கோபு : கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்.
பாபு : 😖😖
--------------------------------------
ஆயில்பேர்ட்..!
--------------------------------------
🐤 தென் அமெரிக்கா பகுதிகளில் அதிகமாக காணப்படும் பறவை இனங்களில் ஒன்று ஆயில்பேர்ட் பறவை ஆகும். இந்தப்பறவை தனது மோப்ப சக்தி மூலம் இரையை தேடுகிறது. கிவி பறவையை போல இதுவும் இரவில் மட்டுமே தனது இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து இரை தேடும். ஆனால் கிவிக்கு இரவில் கண் தெரியாது. இந்த ஆயில்பேர்ட் பறவைகளுக்கு இரவில் நன்றாக கண் தெரியும். இருப்பினும் மோப்ப சக்தி மூலம் தங்கள் இரையை தேடுகின்றன.
--------------------------------------
சிந்தனை துளிகள்..!!
--------------------------------------
🎉 கதவைத் தட்டாதவர்கள் எத்தனையோ வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள்.

🎉 வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிக்கிறோம்.

🎉 மூட நம்பிக்கை அறிவுக்கு ஒரு முட்டுக்கட்டை.
--------------------------------------
டங்க் டுவிஸ்டர்...!!
--------------------------------------
நேசம் இல்லா இடத்திலே நாசம் என்றும் உள்ளதப்பா, ஆசை இல்லா இடத்திலே பூசையொன்றும் இல்லையப்பா, பாசம் உள்ள இடத்தினிலே வாசம் கொள்ளல் நல்லதப்பா.

குட்டக் குட்டக் குனியாதே, கட்டுப் பட்டுத் தொலையாதே. திட்ட வட்ட நெஞ்சுடனே விட்டுக் கொடுத்து வாழ்ந்து வெட்ட வெட்டத் துளிர்த்திடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!