Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 26 ஜூலை, 2021

பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பார்க்கிங்கில் ஒரு சிலர் ஏன் கார் வைப்பரை தூக்கி நிறுத்தறாங்க தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

காரை பார்க்கிங் செய்யும்போது ஒரு சிலர் ஏன் வைப்பரை தூக்கி வைக்கின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு காருக்கு விண்டுஷீல்டு வைப்பர்கள் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்றாக உள்ளன. குறிப்பாக மழை மற்றும் பனி காலங்களில் விண்டுஷீல்டு வைப்பர்கள் பழுது ஏற்படாமல் இயங்குவது மிகவும் அவசியமானது. இல்லாவிட்டால் முன் பக்க விண்டுஷீல்டின் மீது மழை நீர் வடிந்தாலோ அல்லது பனி படர்ந்தாலோ, பாதுகாப்பாக காரை இயக்குவது சிரமமாகி விடும்.

ஆனால் விண்டுஷீல்டு வைப்பர்கள் இருந்தால், மழை அல்லது பனி என எந்த சூழலிலும், காரை பாதுகாப்பாக ஓட்ட முடியும். ஏனெனில் விண்டுஷீல்டின் மீது இருக்கும் மழை நீர் அல்லது பனியை வைப்பர்கள் துடைத்து விடும். எனவே விண்டுஷீல்டு வைப்பர்களை எப்போதும் சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியமானது.

இந்த சூழலில் வெளிப்புறங்களில் காரை பார்க்கிங் செய்திருக்கும் நேரங்களில், விண்டுஷீல்டு வைப்பர்களை உயர்த்தி வைப்பதை ஒரு சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். பார்க்கிங் செய்திருக்கும்போது வைப்பரை உயர்த்தி வைப்பதால், அதில் இருக்கும் ரப்பரின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என அவர்கள் காரணம் சொல்கின்றனர். இதுகுறித்த ஒரு சில விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால், பார்க்கிங் செய்திருக்கும் சமயங்களில் வைப்பரை உயர்த்தி வைப்பதால், ரப்பரின் மீது சேதத்தின் தாக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் அடிக்கடி உயர்த்தி வைப்பது பின்னர் மீண்டும் மடித்து வைத்து கொள்வது என செய்து கொண்டே இருந்தால், வைப்பரின் பாகங்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

அதேபோல் கவனக்குறைவாகவோ அல்லது அவசர அவசரமாகவோ வைப்பரை உயர்த்துவதும் பின் மீண்டும் மடித்து வைப்பதுமாக இருந்தால், வைப்பர் ஃப்ரேம் கட்டமைப்பில் மாற்றங்களோ அல்லது சேதங்களோ ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதையும் நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பொதுவாக கார் பார்க்கிங்கில் இருக்கும்போது வைப்பரை உயர்த்தி வைத்திருந்தாலும் சரி அல்லது மடித்து வைத்திருந்தாலும் சரி, அது வைப்பரின் ஆயுட்காலத்தில் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றுதான் கூறுகின்றனர். ஆனால் விண்டுஷீல்டு வைப்பரை எப்போதும் உயர்த்தியே வைத்திருப்பது தொந்தரவுகளை அதிகம் தருவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன.

பார்க்கிங் செய்திருக்கும்போது வைப்பரை மடக்கி வைத்திருந்தால், விண்டுஷீல்டின் வெப்பமானது, வைப்பர் ரப்பரின் எலாஸ்டிக் தன்மையை குறைக்கலாம். ஆனால் எப்போதும் வைப்பரை உயர்த்தியே வைத்திருப்பது உங்களுக்கு நன்மைகளுக்கு மாறாக அதிக பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள்தான் இருக்கின்றன.

உங்கள் காரை நீங்கள் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக வைப்பர் மீது அதிக கவனம் செலுத்துவது அவசியம். வைப்பரின் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், உடனடியாக அதனை சரி செய்து விடுங்கள். இல்லாவிட்டால் உங்களது பயணத்தின் இடையே திடீரென மழை பெய்ய நேரிட்டால், நீங்கள் தர்மசங்கடங்களை சந்திக்க வேண்டியதிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக