Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 26 ஜூலை, 2021

ஒருவனுக்கு மழையில நனைஞ்சு மண்டை வீங்கிடுச்சாம்... ஏன்?🤔 - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்....!!
-------------------------------------
பாபு : புதுசா வந்திருக்கிற டீச்சர் இங்கிலீஷ்ல நல்லாத்தான் பாடம் நடத்துறாங்க. ஆனா நடு நடுவிலே திடீர்னு நிறுத்திட்டு விளம்பரம் செய்ற மாதிரி அதை உபயோகிங்க, இதை உபயோகிங்கன்னு சொல்றாங்க அது ஏன்டா?
கோபு : அதுவா... அவங்க இங்கிலீஷ் கத்துக்கிட்டது டி.வியிலயாம்...
பாபு : 😂😂
-------------------------------------
தொண்டன் : தலைவரே... எதிர்க்கட்சி தலைவருக்கு நீங்களே உங்க சொந்தச் செலவுல ஏன் சிலை வெக்கிறீங்க?
தலைவர் : நடுரோட்ல உன்னை நிறுத்திக் காட்டறேன்னு சவால் விட்டிருக்கேனே?
தொண்டன் : 😛😛
-------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------
☔ ஒருவனுக்கு மழையில நனைஞ்சு மண்டை வீங்கிடுச்சாம்... ஏன்?
.
.
.
.
.
ஏன்னா அவன் நனைஞ்சது கொட்டுற மழையில.😇😎
-------------------------------------
நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
-------------------------------------
👉 மனத்தூய்மை உள்ளவன்

👉 வாக்கை நிறைவேற்றுபவன்

👉 கண்ணியமானவன்

👉 உண்மையாளன்
-------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------
1. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம். அது என்ன?

2. உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும். அது என்ன? 

3. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர். அதன் கடை மூன்று எழுத்துக்கள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி. அது என்ன?

4. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன? 

5. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும். அது என்ன? 

6. காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர். அது என்ன?

விடை :

1. வானம் 

2. தீக்குச்சி 

3. துத்தநாகம் 

4. மழை

5. மஞ்சள் 

6. தவளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக