Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

18ஜிபி ரேம் உடன் அசுஸ் ரோக் போன் 5எஸ், அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

அசுஸ் ரோக் போன் 5எஸ்,

அசுஸ் நிறுவனம் தனது அசுஸ் ரோக் போன் 5எஸ், அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்களை தைவானில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் அசுஸ் ரோக் போன் 5எஸ், அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முதலில் தைவான் மற்றும் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது.

அசுஸ் ரோக் போன் 5எஸ், அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டுள்ளன. இருப்பினும் அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ மாடல் சில கூடுதல் அம்சங்களுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ

அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் "ROG Vision" PMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 366 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு,
1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 660 GPU ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக கேமிங் வசதிக்கு என்றே இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ROG UI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ரோக் போன் 5எஸ் ப்ரோ.

அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 18ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 24எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

இந்த அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

டூயல்-சிம் 5ஜி மற்றும் 4ஜி எல்டிஇ ஆதரவு, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.2, என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் அசுஸ் ரோக் போன் 5எஸ் சாதனத்துடன் ஒப்பிடுகையில், அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ மாடல் இரண்டு கூடுதல் டச் சென்சார்களையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அசுஸ் ரோக் போன் 5எஸ்

அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போனில் "ROG Vision" PMOLED டிஸ்பிளே வசதி இடம்பெறவில்லை, அதற்கு பதிலாக RGB LED வசதியுடன் கூடிய ROG லோகோ ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போன். இதுதவிர ப்ரோ மாடலில் இருக்கும்இரண்டு சென்சார் வசதிகள் இந்த அசுஸ் ரோக் போன் 5எஸ் மாடலில் இல்லை என்று கூறப்படுகிறது.

மற்றபடி அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து அம்சங்களும் அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோ மாடலில் இருக்கும் கேமரா, பேட்டரி என அனைத்து அம்சங்களும் இந்த அசுஸ் ரோக் போன் 5எஸ் ஸ்மார்ட்போனிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் அசுஸ் ரோக் போன் 5எஸ், அசுஸ் ரோக் போன் 5எஸ் ப்ரோஸ்மார்ட்போன்களின் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக