Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

ஆக்ஸிஸ் வங்கியில் வட்டி விகிதம் மாற்றம்.. தற்போதைய நிலவரம் என்ன.. லாபகரமானதா..!

 

வட்டி விகிதம் மாற்றம்

முதலீடு என்றாலே முதலில் நியாபகத்திற்கு வருவது வங்கி டெபாசிட் தான். ஏனெனில் வட்டி மிக குறைவாக இருந்தாலும், முதலீட்டுக்கு எந்த பங்கம் இல்லாத பாதுகாப்பான திட்டங்களாகும்.

 வருமானம் குறைவாக இருந்தாலும், சந்தை அபாயம் இல்லாத நிரந்தர வருமானமாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் இன்றைய காலக்கட்டத்திலும் முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூத்த குடி மக்களுக்கு மிகச்சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது.

எனினும் பிக்ஸட் டெபாசிட்டுகளில் முதிர்வு காலத்திற்கு பின்பு தான் கிடைக்கும். ஆனால் சில வங்கிகளில் முன்கூட்டியேவும் எடுக்கும் வாய்ப்புண்டு. ஆனால் அதற்கும் அபாரதம் செலுத்த வேண்டியிருக்கும். அதோடு சில வங்கிகளில் பல திட்டங்களை வைத்துள்ளன. ஆக நம் தேவைக்கு ஏற்ப நாம் தேர்தெடுத்துக் கொள்ளலாம்.

வட்டி விகிதம் மாற்றம்

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஆக்ஸிஸ் வங்கியில் தற்போதைய வட்டி விகிதம் என்ன வட்டி விகிதம்? இது யார் யாருக்கு பொருந்தும். உள்ளிட்ட பல விவரங்களை பார்க்கவிருக்கிறோம்.

ஆக்ஸிஸ் வங்கி தனது பிக்ஸட் டெபாட்சிட்களுக்கு வட்டி விகிதத்தினை மாற்றியமைத்துள்ளது. இந்த வட்டி விகிதமானது ஆக்ஸ்ட் 14, 2021 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஆக்ஸிஸ் வங்கியில் வட்டி?

பொதுமக்களுக்கான வட்டி விகிதம் (2 கோடி ரூபாய்க்குள்)

7 முதல் 14 நாட்களுக்கு - 2.50%

15 முதல் 29 நாட்கள் வரையில் - 2.50%

30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.00%

46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் - 3.00%

61 நாட்கள் முதல் 3 மாதம் வரையில் - 3.00%

3 முதல் 4 மாதம் வரையில் - 3.50%

4 முதல் 5 மாதம் வரையில் - 3.50%

5 மாதம் முதல் 6 மாதம் வரையில் - 3.50%

6 மாதம் முதல் 7 மாதம் வரையில் - 4.40%

7 மாதம் முதல் 8 மாதம் வரையில் - 4.40%

8 மாதம் முதல் 9 மாதம் வரையில் - 4.40%

9 மாதம் முதல் 10 மாதம் வரையில் - 4.40%

10 மாதம் முதல் 11 மாதம் வரையில் - 4.40%

11 மாதம் முதல் 11 மாதம் 25 நாட்கள் வரையில் - 4.40%

11 மாதம் 25 நாட்கள் முதல் 1 வருடம் வரையில் - 5.10%

1 வருடம் முதல் 1 வருடம் 5 நாட்கள் வரையில் - 5.10%

1 வருடம் 5 நாட்கள் முதல் 1 வருடம் 11 நாட்கள் வரையில் 5.40%

1 வருடம் 11 நாட்கள் முதல் 1 வருடம் 25 நாட்கள் வரையில் 5.40%

1 வருடம் 25 நாட்கள் முதல் 13 மாதம் வரையில் - 5.10%

13 மாதம் முதல் 14 மாதங்களுக்கு - 5.10%

14 மாதம் முதல் 15 மாதங்களுக்கு - 5.10%

15 மாதம் முதல் 16 மாதங்களுக்கு - 5.10%

16 மாதம் முதல் 17 மாதங்களுக்கு - 5.10%

17 மாதம் முதல் 18 மாதங்களுக்கு - 5.10%

18 மாதம் முதல் 2 வருடங்கள் வரை - 5.25%

2 வருடங்கள் முதல் 30 மாதங்கள் வரை - 5.50%

30 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையில் - 5.50%

3 வருடம் முதல் 5 வருடம் வரையில் - 5.40%

5 வருடம் முதல் 10 வருடம் வரையில் - 5.75%

அபராதம் உண்டா?

ஆக்ஸிஸ் வங்கியில் முன் கூட்டியே வித்ட்ராவல் செய்யப்படும் தொகைக்கு வட்டியும் குறைவாக இருக்கும். எனினும் இன்றைய காலகட்டத்தில் சில வங்கிகள் எந்தவித அபராதமும் விதிப்பதில்லை. ஆக்ஸிஸ் வங்கியின் சில்லறை வாடிக்கையாளர்கள் டிசம்பர் 15க்கு பிறகு டெபாசிட் செய்த ரீடெயில் டெர்ம் டெபாசிட்டுக்களுக்கு முன்கூட்டியே மூடுவதற்கான அபராதம் இல்லை.

இதற்கு அபராதம் உண்டு?

ஆக்ஸிஸ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பானது அனைத்து வகையான பிக்ஸட் டெபாசிட் மற்றும் தொடர்ச்சியான வைப்புகளுக்கும் பொருந்தும். இதே 2 வருட காலத்திற்கு மேலாக பிக்ஸட் டெபாசிட் செய்யப்பட்டால், அதனை 15 மாதங்களுக்கு பின்பு எடுக்கப்பட்டால் அபராதம் இல்லை.

டெர்ம் டெப்பாசிட்டில் 25% வரை திரும்ப பெறுவதற்கு எந்த அபராதமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கவர்ச்சிகரமான வட்டி விகிதம் என பல அம்சங்களையும் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக