Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 15 நவம்பர், 2021

உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான்? அவன் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------
சிரிக்க மட்டுமே...!!!
-----------------------------------------

இரண்டு காதுகளும்👂 தீய்ந்து போன🔥 நிலையில் டாக்டரிடம் ஓடி வந்தான் ஒருவன்🚶...

பதறிப்போன டாக்டர்😮... என்னப்பா என்ன நடந்தது? என்று வியப்போடு கேட்டார்.

நான் சட்டையை அயர்ன்📪 பண்ணிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பாத்து டெலிபோன்☎ மணி அடிச்சுது, டெலிபோனை☎ எடுத்து காதுல வெக்குறதுக்கு பதிலா, மாறி அயர்ன்📪 பாக்ஸை வெச்சுட்டேன் டாக்டர்.. அது தான் காது இப்படி தீஞ்சு போயிருச்சு 🔥என்றான் அவன்.

அது சரி இன்னொரு காதும் எப்படி தீஞ்சுது? என்று கேட்டார் 👤டாக்டர்...

அந்த ராஸ்கல் மறுபடியும் போன் பண்ணினான் டாக்டர்..😀!!
-----------------------------------------
மூன்றெழுத்து...!!
-----------------------------------------
அம்மா மூன்றெழுத்து, அப்பா மூன்றெழுத்து

தம்பி மூன்றெழுத்து, தங்கை மூன்றெழுத்து

அக்கா மூன்றெழுத்து, அண்ணி மூன்றெழுத்து

மகன் மூன்றெழுத்து, மகள் மூன்றெழுத்து

காதலி மூன்றெழுத்து, மனைவி மூன்றெழுத்து

மாமன் மூன்றெழுத்து, அத்தை மூன்றெழுத்து

தாத்தா மூன்றெழுத்து, பாட்டி மூன்றெழுத்து

பேரன் மூன்றெழுத்து, பேத்தி மூன்றெழுத்து

இவை அனைத்தும் அடங்கிய உறவு மூன்றெழுத்து

உறவில் மேம்படும் பாசம் மூன்றெழுத்து

பாசத்தில் விளையும் அன்பு மூன்றெழுத்து

இவற்றை பிணைக்கும் நட்பு மூன்றெழுத்து
 
இதை படித்த அனைவருக்கும் நன்றி என்பதும் மூன்றெழுத்து

இவை அனைத்தும் அடங்கிய தமிழ் மூன்றெழுத்து....
-----------------------------------------
தமிழ் விடுகதைகள்...!!
-----------------------------------------

1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும்... அவன் யார்? 

🦂 தேள் 

2. பிடுங்கலாம் நடமுடியாது... அது என்ன?

💇 தலைமுடி 

3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான்... அவன் யார்?

🌰 வெங்காயம் 

4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான்... அவன் யார்? 

🌴 கரும்பு 

5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல... அது என்ன? 

🌿 விழுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக