>>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 19 அக்டோபர், 2023

    19-10-2023 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

    ஐப்பசி 2 - வியாழக்கிழமை

    🔆 திதி : அதிகாலை 12.13 வரை சதுர்த்தி பின்பு இரவு 11.04 வரை பஞ்சமி பின்பு சஷ்டி.

    🔆 நட்சத்திரம் : இரவு 08.27 வரை கேட்டை பின்பு மூலம்.

    🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம்

    💥 கிருத்திகை, ரோகிணி

    பண்டிகை

    🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    🌷 திருவட்டாறு சிவபெருமான் பவனி வரும் காட்சி.

    🌷 ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சலில் உற்சவ சேவை.

    வழிபாடு

    🙏 தட்சிணாமூர்த்தியை வழிபட தெளிவுகள் உண்டாகும்.

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 யந்திரம் செய்வதற்கு நல்ல நாள்.

    🌟 கால்வாய் போடுவதற்கு உகந்த நாள்.

    🌟 வழக்கு விவகாரங்களை தொடங்குவதற்கு ஏற்ற நாள்.

    🌟 வயல் உழுவதற்கு சிறந்த நாள்.

    லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

    மேஷ லக்னம் 05.43 PM முதல் 07.26 PM வரை 

    ரிஷப லக்னம் 07.27 PM முதல் 09.28 PM வரை 

    மிதுன லக்னம் 09.29 PM முதல் 11.40 PM வரை 

    கடக லக்னம் 11.41 PM முதல் 01.49 AM வரை 

    சிம்ம லக்னம் 01.50 AM முதல் 03.52 AM வரை 

    கன்னி லக்னம் 03.53 AM முதல் 05.53 AM வரை 

    துலாம் லக்னம் 05.54 AM முதல் 08.04 AM வரை 

    விருச்சிக லக்னம் 08.05 AM முதல் 10.16 AM வரை 

    தனுசு லக்னம் 10.17 AM முதல் 12.23 PM வரை 

    மகர லக்னம் 12.24 PM முதல் 02.16 PM வரை 

    கும்ப லக்னம் 02.17 PM முதல் 03.58 PM வரை 

    மீன லக்னம் 03.59 PM முதல் 05.38 PM வரை
    ━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
    இன்றைய ராசி பலன்கள்
    ━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
    மேஷம்

    உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் ஏற்படும். இழுபறியான சில பணிகள் நிறைவுபெறும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தவறிய சில பணிகளை மீண்டும் செய்வதற்கான சூழல் அமையும். வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு

    அதிர்ஷ்ட எண் : 9

    அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 


    அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும். 

    பரணி : கவனம் வேண்டும்.

    கிருத்திகை : செலவுகள் ஏற்படும். 
    ---------------------------------------
    ரிஷபம்

    வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நினைத்த சில பணிகளில் மாற்றம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். குழந்தைகளின் போக்கில் கவனம் வேண்டும். ஊக்கம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

    அதிர்ஷ்ட எண் : 4

    அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


    கிருத்திகை : ஒத்துழைப்பு ஏற்படும்.  

    ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.

    மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.  
    ---------------------------------------
    மிதுனம்

    குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். ஆக்கம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 

    அதிர்ஷ்ட எண் : 3

    அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


    மிருகசீரிஷம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

    திருவாதிரை : அனுபவம் ஏற்படும்.

    புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். 
    ---------------------------------------
    கடகம்

    விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விவசாயப் பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வாழ்க்கைத் துணைவர்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். மாற்றம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு

    அதிர்ஷ்ட எண் : 6

    அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


    புனர்பூசம் : மகிழ்ச்சி ஏற்படும். 

    பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

    ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும்.
    ---------------------------------------
    சிம்மம்

    பழைய நினைவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தடைபட்ட சில வரவுகள் சாதகமாகும். கலைப் பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாமதம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு

    அதிர்ஷ்ட எண் : 9

    அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


    மகம் : மகிழ்ச்சி உண்டாகும். 

    பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.

    உத்திரம் : ஆரோக்கியம் மேம்படும்.
    ---------------------------------------
    கன்னி

    உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் செழிப்பான சூழல் நிலவும். சவாலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் தைரியம் கூடும். பொறுமை வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

    அதிர்ஷ்ட எண் : 5

    அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்


    உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும். 

    அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.

    சித்திரை : தைரியம் கூடும்.
    ---------------------------------------
    துலாம்

    கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். உத்தியோகப் பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் கிடைக்கும். கடன் உதவிகள் சாதகமாகும். உழைப்புக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். வழக்குகளில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  

    அதிர்ஷ்ட எண் : 9

    அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

     
    சித்திரை : மாற்றம் உண்டாகும்.

    சுவாதி : அறிமுகம் கிடைக்கும்.

    விசாகம் : திருப்பங்கள் ஏற்படும்.
    ---------------------------------------
    விருச்சிகம்

    சிந்தனைகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். திடீர் முடிவுகளைத் தவிர்க்கவும். தனம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெற்றி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு

    அதிர்ஷ்ட எண் : 7

    அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 


    விசாகம் : உதவிகள் கிடைக்கும். 

    அனுஷம் : மேன்மை உண்டாகும். 

    கேட்டை : ஆதரவான நாள்.
    ---------------------------------------
    தனுசு

    வாழ்க்கைத் துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதரர்களின் வழியில் காரிய அனுகூலம் ஏற்படும். தடைபட்ட பேச்சுக்கள் கைகூடி வரும். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். புகழ் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு 

    அதிர்ஷ்ட எண் : 6

    அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


    மூலம் : பயணங்கள் கைகூடும். 

    பூராடம் : அனுகூலமான நாள்.

    உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
    ---------------------------------------
    மகரம்

    எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளிவட்டாரங்களில் மதிப்பு உயரும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் மேம்படும். சக ஊழியர்களால் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். சாதனை நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு

    அதிர்ஷ்ட எண் : 4

    அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம் 


    உத்திராடம் : மனப்பக்குவம் உண்டாகும். 

    திருவோணம் : மதிப்பு உயரும். 

    அவிட்டம் : ஒத்துழைப்பான நாள்.
    ---------------------------------------
    கும்பம்

    தேவைக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நெருக்கமானவர்களைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் நம்பிக்கை மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு

    அதிர்ஷ்ட எண் : 3

    அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்


    அவிட்டம் : வரவுகள் உண்டாகும். 

    சதயம் : மேன்மை ஏற்படும். 

    பூரட்டாதி : நம்பிக்கை மேம்படும்.
    ---------------------------------------
    மீனம்

    குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் தடைபட்ட பணிகள் கைகூடி வரும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். ஈகை நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு

    அதிர்ஷ்ட எண் : 8

    அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்


    பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.

    உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

    ரேவதி : பாதைகள் புலப்படும்.
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக