🔆 திதி : மாலை 06.28 வரை பஞ்சமி பின்பு சஷ்டி.
🔆 நட்சத்திரம் : மாலை 04.39 வரை ரேவதி பின்பு அஸ்வினி.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.34 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 மகம், பூரம்
பண்டிகை
🌷 திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம், சுவாமி பெரிய தந்தப்பல்லக்கில் பவனி வரும் காட்சி.
வழிபாடு
🙏 நாகதேவர்களை வழிபட முயற்சிகளில் இருந்துவந்த இடையூறுகள் விலகும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 கல்விப் பணிகளை தொடர நல்ல நாள்.
🌟 புதிய வேலைக்கு சேர உகந்த நாள்.
🌟 ஆபரணங்களை வாங்க ஏற்ற நாள்.
🌟 கலைப் பணிகளில் ஆலோசனை பெற சிறந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 09.59 AM முதல் 11.42 AM வரை
ரிஷப லக்னம் 11.43 AM முதல் 01.44 PM வரை
மிதுன லக்னம் 01.45 PM முதல் 03.56 PM வரை
கடக லக்னம் 03.57 PM முதல் 06.05 PM வரை
சிம்ம லக்னம் 06.06 PM முதல் 08.08 PM வரை
கன்னி லக்னம் 08.09 PM முதல் 10.10 PM வரை
துலாம் லக்னம் 10.11 PM முதல் 12.16 AM வரை
விருச்சிக லக்னம் 12.17 AM முதல் 02.28 AM வரை
தனுசு லக்னம் 02.29 AM முதல் 04.35 AM வரை
மகர லக்னம் 04.36 AM முதல் 06.29 AM வரை
கும்ப லக்னம் 06.30 AM முதல் 08.14 AM வரை
மீன லக்னம் 08.15 AM முதல் 09.54 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சிறு மற்றும் குறுந்தொழிலில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளுடன் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை உண்டாகும். பழக்க வழக்கங்களால் மாற்றமான சூழல் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அஸ்வினி : பொறுமை வேண்டும்.
பரணி : வாதங்களை தவிர்க்கவும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உங்களின் பேச்சுகளுக்கு மதிப்பு ஏற்படும். இலக்கியப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால வைப்பு நிதிகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கிருத்திகை : கலகலப்பான நாள்.
ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
மிதுனம்
மனதளவில் புதுவிதமான சிந்தனை உண்டாகும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் விரிவடையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : சிந்தனை உண்டாகும்.
திருவாதிரை : ஆதாயகரமான நாள்.
புனர்பூசம் : நெருக்கம் மேம்படும்.
---------------------------------------
கடகம்
இடமாற்றம் தொடர்பான விஷயங்களில் தாமதம் உண்டாகும். இனம்புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான தயக்கம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல் உண்டாகும். இறை வழிபாட்டால் மனதிற்கு அமைதி ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக வாய்ப்பு ஏற்படும். மறதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
புனர்பூசம் : தாமதமான நாள்.
பூசம் : அலைச்சல் உண்டாகும்.
ஆயில்யம் : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------
சிம்மம்
ஆடம்பரமான விஷயங்களால் சேமிப்பு குறையும். உடன் பிறப்புகளிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களால் சில விரயங்கள் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
மகம் : சேமிப்பு குறையும்.
பூரம் : வாதங்களை தவிர்க்கவும்.
உத்திரம் : அலைச்சல் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். கால்நடைகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
உத்திரம் : முடிவு கிடைக்கும்.
அஸ்தம் : குழப்பம் விலகும்.
சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
துலாம்
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் மேன்மை உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
சித்திரை : தேடல் அதிகரிக்கும்.
சுவாதி : பக்குவம் ஏற்படும்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. காப்பீடு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : தாமதம் உண்டாகும்.
அனுஷம் : கவலைகள் குறையும்.
கேட்டை : விவேகம் வேண்டும்.
---------------------------------------
தனுசு
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். புதுவிதமான கனவுகளால் குழப்பம் ஏற்படும். கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் புரிதல் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : புரிதல் ஏற்படும்.
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
மகரம்
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பணப்புழக்கம் சூழலுக்கு ஏற்ப சாதகமாக இருக்கும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
உத்திராடம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : புரிதல் மேம்படும்.
---------------------------------------
கும்பம்
பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயம் ஏற்படும். நீண்ட கால முதலீடு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உடன் பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அவிட்டம் : விரயம் ஏற்படும்.
சதயம் : சோர்வு உண்டாகும்.
பூரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும்.
---------------------------------------
மீனம்
சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : தாமதம் உண்டாகும்.
ரேவதி : இழுபறிகள் மறையும்.
--------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக