Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

28-04-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

சித்திரை 15 - ஞாயிற்றுக்கிழமை

🔆 திதி : காலை 07.06 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 03.21 வரை கேட்டை பின்பு மூலம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.57 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 பரணி

பண்டிகை

🌷 சென்னை ஸ்ரீகேசவப்பெருமாள் காலை தங்கத் தொட்டிலில் சூர்ணாபிஷேகம், இரவு யானை வாகனத்தில் பவனி வரும் காட்சி.

🌷 வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பவனி வரும் காட்சி.

🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் சூர்ணாபிஷேகம்.

வழிபாடு

🙏 சிவபெருமானை வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 கரிநாள்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 கால்நடைகள் வாங்குவதற்கு உகந்த நாள்.

🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு சிறந்த நாள்.

🌟 தலைமை பொறுப்புகளை ஏற்க நல்ல நாள்.

🌟 பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏற்ற நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 05.16 AM முதல் 07.04 AM வரை

ரிஷப லக்னம் 07.05 AM முதல் 09.06 AM வரை

மிதுன லக்னம் 09.07 AM முதல் 11.18 AM வரை

கடக லக்னம் 11.19 AM முதல் 01.26 PM வரை

சிம்ம லக்னம் 01.27 PM முதல் 03.28 PM வரை 

கன்னி லக்னம் 03.29 PM முதல் 05.28 PM வரை 

துலாம் லக்னம் 05.29 PM முதல் 07.34 PM வரை

விருச்சிக லக்னம் 07.35 PM முதல் 09.45 PM வரை

தனுசு லக்னம் 09.46 PM முதல் 11.52 PM வரை

மகர லக்னம் 11.53 PM முதல் 01.47 AM வரை

கும்ப லக்னம் 01.48 AM முதல் 03.30 AM வரை

மீன லக்னம் 03.31 AM முதல் 05.11 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
         இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்

அரசு தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்திப் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அளவுடன் இருக்கவும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள். 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 

அஸ்வினி : பாராட்டுகளை பெறுவீர்கள்.
பரணி : தேடல் பிறக்கும். 
கிருத்திகை : பயணங்கள் கைகூடும். 
---------------------------------------
ரிஷபம்

பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயம் உண்டாகும். மறைமுகமான சில தடைகளால் காலதாமதம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பும், அலைச்சலும் உண்டாகும். உயர் கல்வி குறித்த செயல்பாடுகளில் பொறுமை காக்கவும். மனதில் வித்தியாசமான கற்பனைகள் மேம்படும். பூர்வீக சொத்து சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள். 


அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் 

கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.
ரோகிணி : பொறுமை காக்கவும். 
மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------
மிதுனம்

தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.   


அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 

மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
திருவாதிரை : வெற்றி கிடைக்கும். 
புனர்பூசம் : சேமிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்

திடீர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.   


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 

புனர்பூசம் : அனுபவம் உண்டாகும். 
பூசம் : வாய்ப்பு கிடைக்கும். 
ஆயில்யம் : வெற்றிகரமான நாள்.
---------------------------------------
சிம்மம்

குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பொன், பொருட்சேர்க்கை குறித்த எண்ணம் மேம்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.   


அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

மகம் : பயணம் சாதகமாகும்.
பூரம் : ஆதாயம் உண்டாகும். 
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
கன்னி

ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். வீடு மாற்றம் குறித்த எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். பயணத்தில் மிதவேகம் நல்லது. சமூகப் பணிகளில் தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.   


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் 

உத்திரம் : மந்தத்தன்மை விலகும்.  
அஸ்தம் : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.
சித்திரை : ஆதாயம் உண்டாகும். 
---------------------------------------
துலாம்

உடன்பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விளையாட்டு சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.   


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 

சித்திரை : அலைச்சல் ஏற்படும்.
சுவாதி : ஒப்பந்தம் சாதகமாகும். 
விசாகம் : அனுபவம் ஏற்படும். 
---------------------------------------
விருச்சிகம்

பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்தினர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உயர்நிலை கல்வியில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத சில தனவரவுகளின் மூலம் மேன்மை ஏற்படும். அடமானப் பொருட்களை மீட்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.   


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் 

விசாகம் : முடிவு பிறக்கும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : வாய்ப்பு கிடைக்கும்.
---------------------------------------
தனுசு

எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனை உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளில் மற்றவரை எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்கள் பற்றிய கவலை அதிகரிக்கும். வியாபாரத்தில் இடமாற்றம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.   


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம் 

மூலம் : புதுமையான நாள். 
பூராடம் : புரிதல் உண்டாகும்.
உத்திராடம் : இடமாற்றம் ஏற்படும்.
---------------------------------------
மகரம்

தந்தை வழி உறவினர்களால் அலைச்சலும், அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். தான, தர்மம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். குடியுரிமை பிரச்சனைகளால் விரயம் உண்டாகும். கீர்த்தி நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்  

உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
திருவோணம் : பொறுமை வேண்டும்.
அவிட்டம் : விரயம் உண்டாகும். 
---------------------------------------
கும்பம்

சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சி அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.  


அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 

அவிட்டம் : முயற்சி அதிகரிக்கும். 
சதயம் : பிரச்சனைகள் குறையும்.
பூரட்டாதி : மனப்பக்குவம் ஏற்படும். 
---------------------------------------
மீனம்

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வீடு பராமரிப்பு தொடர்பான பணிகள் நிறைவேறும். சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.   


அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.  
உத்திரட்டாதி : புரிதல் அதிகரிக்கும். 
ரேவதி : வாய்ப்பு கிடைக்கும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக