Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

30-04-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

சித்திரை 17 - செவ்வாய்க்கிழமை

🔆 திதி : அதிகாலை 04.46 வரை சஷ்டி பின்பு சப்தமி.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 02.39 வரை பூராடம் பின்பு உத்திராடம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 02.39 வரை சித்தயோகம் பின்பு அதிகாலை 05.57 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 ரோகிணி

பண்டிகை

🌷 சென்னை ஸ்ரீகேசவப்பெருமாள் யாளி வாகனத்திலும், மாலை தங்கக் குதிரை வாகனத்திலும் பவனி வரும் காட்சி.

🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்

வழிபாடு 

🙏 முருகரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற நாள்.

🌟 நந்தவனம் அமைக்க நல்ல நாள்.

🌟 கடன்களை அடைப்பதற்கு சிறந்த நாள்.

🌟 கட்டிடப் பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 05.08 AM முதல் 06.56 AM வரை

ரிஷப லக்னம் 06.57 AM முதல் 08.58 AM வரை 

மிதுன லக்னம் 08.59 AM முதல் 11.10 AM வரை 

கடக லக்னம் 11.11 AM முதல் 01.18 PM வரை 

சிம்ம லக்னம் 01.19 PM முதல் 03.20 PM வரை

கன்னி லக்னம் 03.21 PM முதல் 05.20 PM வரை

துலாம் லக்னம் 05.21 PM முதல் 07.26 PM வரை

விருச்சிக லக்னம் 07.27 PM முதல் 09.37 PM வரை

தனுசு லக்னம் 09.38 PM முதல் 11.45 PM வரை

மகர லக்னம் 11.46 PM முதல் 01.39 AM வரை

கும்ப லக்னம் 01.40 AM முதல் 03.22 AM வரை

மீன லக்னம் 03.23 AM முதல் 05.03 AM வரை 
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
          இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்

பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் தெளிவான முடிவு பிறக்கும். மனதில் தொழில் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் பொறுப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். உயர்வு நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

அஸ்வினி : அலைச்சல் உண்டாகும்.
பரணி : பொறுப்பு மேம்படும்.
கிருத்திகை : உதவிகள் சாதகமாகும். 
---------------------------------------
ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். தீர்த்த யாத்திரை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் வர்த்தகம் தொடர்பான உதவிகள் மேம்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வழக்கு சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். விவேகமான செயல்பாடுகளால் நன்மதிப்பு உண்டாகும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
ரோகிணி : உதவிகள் மேம்படும். 
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்

உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். உயர் அதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். நீண்ட நாள் முதலீடு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். மறைமுக வருமானங்களில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும். 
திருவாதிரை : சேமிப்பு குறையும்.
புனர்பூசம் : சிந்தித்து முடிவெடுக்கவும். 
---------------------------------------
கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தனவரவுகளால் நெருக்கடிகள் நீங்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். தேர்ச்சி நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : நெருக்கடிகள் நீங்கும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : குழப்பம் விலகும்.
---------------------------------------
சிம்மம்

பணி நிமிர்த்தமான சிந்தனை மேம்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் தெளிவு பிறக்கும். கனிவு நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் 

மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : ஒத்துழைப்பு ஏற்படும். 
உத்திரம் : தெளிவு பிறக்கும்.
---------------------------------------
கன்னி

திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். மறைமுக தடைகளால் காலதாமதம் உண்டாகும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.  

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திரம் : சோர்வுகள் ஏற்படும். 
அஸ்தம் : சிந்தித்துச் செயல்படவும். 
சித்திரை : சிந்தனை அதிகரிக்கும்.
---------------------------------------
துலாம்

உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத பயணங்களால் சாதகமான வாய்ப்பு ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் மேன்மை ஏற்படும். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம் 

சித்திரை : விட்டுக்கொடுத்துச் செல்லவும். 
சுவாதி : மாற்றம் ஏற்படும். 
விசாகம் : ஆர்வமின்மையான நாள்.
---------------------------------------
விருச்சிகம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளால் மனமகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கேட்டை : தேவைகள் நிறைவேறும்.
---------------------------------------
தனுசு

கனிவான பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். பயணங்கள் சாதகமாக அமையும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் புதிய மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம் 

மூலம் : அனுகூலம் ஏற்படும். 
பூராடம் : அமைதியான நாள்.
உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
மகரம்

மனதளவில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பொறுப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகளில் பொறுமை வேண்டும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். புதிய நபர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 

உத்திராடம் : தடுமாற்றம் ஏற்படும். 
திருவோணம் : பொறுமை வேண்டும். 
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
கும்பம்

குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் நலத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மத்தியமாக கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பகை விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் 

அவிட்டம் : வாக்குவாதங்கள் நீங்கும். 
சதயம் : லாபம் கிடைக்கும்.
பூரட்டாதி : அலைச்சல் அதிகரிக்கும்.
---------------------------------------
மீனம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்.

பூரட்டாதி : அபிவிருத்தியான நாள்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 
ரேவதி : நம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக