Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூலை, 2024

03-07-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்


ஆனி 19 - புதன்கிழமை 

🔆 திதி : காலை 07.45 வரை துவாதசி பின்பு திரியோதசி.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 04.51 வரை கிருத்திகை பின்பு ரோகிணி.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.31 வரை சித்தயோகம் பின்பு அதிகாலை 05.57 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 இன்று அதிகாலை 04.51 வரை சித்திரை பின்பு சுவாதி

பண்டிகை

🌷 மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி வாகனத்தில் புறப்பாடு.

🌷 சகல சிவ ஆலயங்களில் மாலையில் ஸ்ரீநந்தீஸ்வரர் வழிபாட்டு அபிஷேகம்.

🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த சாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு.

வழிபாடு

🙏 சிவபெருமானை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 பிரதோஷம்

💥 சுபமுகூர்த்த தினம்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 வாகன பழுதுகளை சரிசெய்வதற்கு ஏற்ற நாள்.

🌟 கட்டிட மதில் சுவர் பணிகளை மேற்கொள்ள சாதகமான நாள்.

🌟 கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

🌟 நடனம் தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்கு சிறந்த நாள்.
_______________________________
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
_______________________________
மேஷ லக்னம் 12.56 AM முதல் 02.41 AM வரை

ரிஷப லக்னம் 02.42 AM முதல் 04.43 AM வரை

மிதுன லக்னம் 04.44 AM முதல் 06.58 AM வரை

கடக லக்னம் 06.59 AM முதல் 09.07 AM வரை

சிம்ம லக்னம் 09.08 AM முதல் 11.09 AM வரை

கன்னி லக்னம் 11.10 AM முதல் 01.09 PM வரை

துலாம் லக்னம் 01.10 PM முதல் 03.14 PM வரை

விருச்சிக லக்னம் 03.15 PM முதல் 05.26 PM வரை

தனுசு லக்னம் 05.27 PM முதல் 07.33 PM வரை

மகர லக்னம் 07.34 PM முதல் 09.28 PM வரை

கும்ப லக்னம் 09.29 PM முதல் 11.11 PM வரை

மீன லக்னம் 11.12 PM முதல் 12.51 AM வரை
_______________________________
 இன்றைய ‌ராசி பலன்கள்
_______________________________
மேஷம்

குடும்பத்தாரின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடு குறித்த சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அதிரடியான சில செயல்களின் மூலம் புதுமையான வாய்ப்புகள் அமையும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : உதவிகள் கிடைக்கும். 
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்

விற்பனை சார்ந்த துறைகளில் அலைச்சல்களுக்கு ஏற்ப ஆதாயம் கிடைக்கும். சமூக ஆர்வலர்கள் மேடைப் பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். நண்பர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

கிருத்திகை : ஆதாயம் கிடைக்கும். 
ரோகிணி : மாற்றமான நாள்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
மிதுனம்

வியாபாரத்தில் மத்தியமான லாபம் கிடைக்கும். துரித உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களின் விஷயத்தில் விவேகத்துடன் முடிவெடுக்கவும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகப் பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : லாபம் கிடைக்கும். 
திருவாதிரை : விவாதங்களை தவிர்க்கவும். 
புனர்பூசம் : அலைச்சல் உண்டாகும்.
---------------------------------------
கடகம்

சுப நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். விலகிச் நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பாராத சிலருடைய சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். கவலைகள் மறையும் நாள். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
பூசம் : செல்வாக்கு உயரும்.
ஆயில்யம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்

நீண்ட காலமாக தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறும். சுப காரிய விஷயங்களில் பொறுமை வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்களால் அனுகூலமான சூழல் அமையும். இடுப்பு மற்றும் காலில் சிறு சிறு வலிகள் தோன்றி மறையும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம்

மகம் : பொறுமை வேண்டும். 
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : மதிப்புகள் உயரும். 
---------------------------------------
கன்னி

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். சேமிப்புகளின் மூலம் ஆதாயமான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : மாற்றமான நாள்.
சித்திரை : சிக்கல்கள் குறையும்.
---------------------------------------
துலாம்

செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். நெருக்கமானவர்களிடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில வரவுகள் தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். உத்தியோகத்திலும் மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். விவேகம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் 

சித்திரை : படபடப்பு நீங்கும்.
சுவாதி : தாமதம் உண்டாகும்.
விசாகம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------
விருச்சிகம்

தந்தைவழி உறவுகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். துணைவர் வழியில் மதிப்பு அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : லாபம் மேம்படும். 
கேட்டை : தடைகள் விலகும்.
---------------------------------------
தனுசு

சொத்து பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கலைத்துறையில் சாதகமான சூழல் ஏற்படும். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளால் மதிப்பு உயரும். கடனை அடைப்பதற்கான வழிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீல நிறம்

மூலம் : ஆரோக்கியம் மேம்படும். 
பூராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 
உத்திராடம் : மதிப்புகள் உயரும்.
---------------------------------------
மகரம்

வெளியூர் பயணங்கள் நன்மை தரும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். கலைத்துறையில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். நிர்வாக துறைகளில் உயர்வு ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

உத்திராடம் : நன்மையான நாள்.
திருவோணம் : நுணுக்கங்களை அறிவீர்கள். 
அவிட்டம் : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்

நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வீடு பழுது பணிகளை மேற்கொள்வீர்கள். தாயாரின் ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக தடைகளை முறியடிப்பீர்கள். சக ஊழியர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : அனுபவம் உண்டாகும்.
சதயம் : செலவுகள் ஏற்படும். 
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
மீனம்

ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதிகாரிகளிடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
உத்திரட்டாதி : தாமதங்கள் விலகும்.
ரேவதி : தைரியம் பிறக்கும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக