
ஆடு புலி ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக
விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது.
இது ஒரு மதிநுட்ப உத்தி
விளையாட்டு.
விளையாடுபவர்களின் எண்ணிக்கை: 2
ஆடுபொருள்: புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து)
மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்கள்.
ஆடுகளம்: பாறை அல்லது திண்ணையில் கோடு போட்ட அரங்கம். முக்கோணக் கூம்புக்
கோடு.
ஆடுபொருளின் எண்ணிக்கை: ஆடுகள் என்னும் பெயரில் 15
சிறு காய்கற்கள். புலி என்னும் பெயரில் 3 சற்றே பெரிய காய்கற்கள்.
வேறு தமிழ் பெயர்கள்: வெட்டும்புலி ஆட்டம், குழை
எடு ஆட்டம்.
சங்கப்பாடல்
வங்கா வரிப் பறைச் சிறு பாடு
முணையின், செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும், விளையாடு இன் நகை (நற்றிணை 341)
குறிப்பிடுகிறது.
பயன்கள்: மதி
நுட்பத்திறன் அதிகரிக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக