Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 22 மார்ச், 2019

பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த செவ்வாழைப்பழம்

Related image
நாம் விரும்பி சாப்பிடும் வகையில் முதல் வரிசையில் இருப்பது வாழைப்பழம் ஒன்று தான்.
வாழைப்பழம் என்றால் என்னவென்று அறியாத மேல்நாட்டினர் கூட ,இப்போது வாழைப்பழத்தை விஷயத்தை அறிந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். 
எல்லா வகையான வாழைப்பழங்களுக்கு மனிதனுக்கு ஏற்படக்கூடிய பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.


செவ்வாழை பழத்தில் உள்ள சத்துக்கள்:
வைட்டமின் ஏ
வைட்டமின் பி, பி2, சி சத்துகள் நிறைய இருக்கின்றன.
சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது.

நரம்பு தளர்ச்சி குணமாக :
உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு எலும்பும் நரம்பும் தான் காரணம். வளர்ச்சி அடைந்து எலும்பு தளராது. ஆனால் நரம்பு தளர்ச்சி ஏற்படும். பலம் குறையும்.
இதன் காரணமாக உடல் நலியும், கை கால்களில் சக்தியற்ற நிலை தோன்றும்.
சிலருக்கு நடுக்கம் ஏற்படும். சோம்பல் ஏற்படும்.
 இப்படிப்பட்ட கோளாறுகள் இருப்பவர்கள் தினசரி ஒரு செவ்வாழை பழம் வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் போதும், உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும்.
உடல் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் உண்டாகும். ஒரு புதிய மனிதனாகவே மாறிவிட முடியும் 
பல் சம்பந்தமான வியாதிகளுக்கு:
உடலில் தேவையான அளவு வைட்டமின் ஏ உயிர்சத்து உடலுக்கு கிடைக்கவில்லை  என்றான் உடலில் பல வியாதிகள் தோன்றும். 
அவர்கள் முதலாவதாக பல்வலி, பல் அசைவு, பல் சொத்தை போன்ற பல கோளாறுகள் ஏற்படும். 
வலி ஏற்பட்டால், பல் சொத்தை இருந்தால் உடனே அந்தப் பல்லைப் பிடுங்கிவிடுவார்கள். இது தவறு. 
ஒரு பல்லைப் பிடுங்கினால் அடுத்துள்ள இரண்டு பற்களுக்கும் பக்க பலம் குறையும். பிறகு அவைகளும் அசைய தொடங்கும்.
பல் சம்பந்தமான கோளாறு ஏற்பட்டால் உடனே உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ உயிர்சத்து அளிக்கவேண்டும். 
தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.
தோற்றும் எந்த வகையான நோய்க்கும்.பயப்பட வேண்டியதில்லை: 
நான்கு தினங்களுக்கு ஒரு முறையாவது ஒரு செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் போதுமானது. எந்தவிதமான தொற்று நோய்க்கு ஆளாகாமல் சுகமாக வாழலாம். விஷக் கிருமிகளைக் கொல்லக்கூடிய ஒரு தனிப்பட்ட சக்தி செவ்வாழைபழத்திற்கு உண்டு.
கண்பார்வை தெளிவடைய:
 வயதானவர்களுக்குத்தான் கண் பார்வை குறையும் என்பதில்லை. வாலிப வயதினருக்கும், சிறுவர்களும்கூட, கண்பார்வை மங்கும். இதற்கு பெரும்பாலான காரணம் வைட்டமின் உயிர்ச்சத்து இல்லாத குறையை தான் என்றும் சொல்லலாம்.
கண் பார்வை மங்க ஆரம்பித்த உடனேயே உடலில் வைட்டமின் ஏ உயிர்சத்து குறைந்துவிட்டது என்பதை அறிந்து, அதற்கேற்ற முறையில் உடலுக்கு வைட்டமின் ஏ சத்தை அளித்தாள், கண் பார்வை படிப்படியாக தெளிவடையும். இயற்கையாக பார்வை பெற முடியும். இதற்கு செவ்வாழைப்பழம் நன்கு பயன்படக் கூடியதாக இருக்கிறது. 
தினசரி செவ்வாழை பழத்தை பாதியளவு முதல் முழு அளவு வரை தொடர்ந்து 21 தினங்களுக்குக் கொடுத்து வந்தாலே போதும் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும். 
குழந்தை பாக்கியம் பெற:
ஒருசில குடும்பத்தில் திருமணமான தம்பதிகளுக்கு பல ஆண்டுகள் வரை கர்ப்பம் தரிப்பது இல்லை.
ஒரு சிலர் கர்ப்பம் தரிக்க மருந்துகளையும், மாத்திரைகளையும் விழுங்கி கடைசியில் பலன் கிடைக்காமல் ஏங்குவார்கள். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தும் தம்பதிகளுக்கு, செவ்வாழை வாழைப்பழம் ஒரு வரப்பிரசாதம் போல இருந்து வருகிறது. தினசரி இரவு ஆகாரத்திற்கு பின் ஆண் பெண் இருவரும் தலைக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு தேக்கரண்டியளவு சுத்தமான தேனையும் சாப்பிட வேண்டும். இந்த வகையில் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு பிறகு உடலுறவு கொண்டால் அந்த தம்பதிகளுக்கு கண்டிப்பாக கர்ப்பம் தரிக்கும் கருத்தரிப்பதற்கு தேவையான ஒரு தனிப்பட்ட சக்தி இந்த செவ்வாழைபழத்திற்கு உண்டு.

 பல நன்மைகளை தரும் இந்த செவ்வாழைப்பழத்தை நாம் தினசரி ஒரு வாழைப்பழம் வீதம் நாம் எடுத்துக் கொண்டு வந்தால் நம் எந்த நோய்க்கும் ஆளாகாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!