Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 22 மார்ச், 2019

சினத்தை நிர்வகிப்பது எப்படி ?

Image result for சினத்தை நிர்வகிப்பது எப்படி ?


ஒரு சிறு இடைவேளை தேவை 

  • கோபம் தலைக்கேறினால் பத்து வரை எண்ணுங்கள்என்ற அறிவுரை சிறு பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல

  • உச்ச கட்ட கோபத்தில் இருக்கும் போது நிதானமாக கண்களை மூடி, மூச்சை ஆழ்ந்து சுவாசித்து, ஒன்று முதல் பத்து வரை பொறுமையாக எண்ணுங்கள்இவ்வாறான திடீர் நிதானம், கோபத்தை தணிக்க உதவும்.                         
  • வேண்டும் என்றால், அந்த இடத்தை விட்டு அகல்வதும் சரியான ஆலோசனை ஆகும் 



கோபத்தின் காரணத்தை ஆராய்
  •  பெரும்பாலும், கோபம் என்பது மற்ற மனக் கிளர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும்.  

  • நீங்கள் நிஜமாகவே கோபம் ஏற்படுத்திய விஷயத்தின் மீது கோபத்தில் இருக்கிறீர்களா ? அல்லது மன உளைவு, அவமானம், பாதுகாப்பின்மை, புண்பட்ட நெஞ்சம், பயம் ஆகிய ஏதேனும் உணர்ச்சியின் உள்ளீடு தான் உங்கள் கோபமா ? என்பதை முதலில் ஆராய வேண்டும்


  • கோபத்தின் வேர் தெரிந்தால் அல்லவா அதற்கான தீர்வு காண முடியும் ?



நில், யோசி, பேசு

  • சினத்தின் தணலில் வாடும் போது, எதிராளியை நோக்கி வாய்க்கு வந்ததை சுலபமாக சொல்லி விட்டு, பிறகு வருந்துவதே மனித இயல்பு


  • நேர்மாறாக, சில நொடிகளை செலவழித்து மனதை ஒருமுகப்படுத்தி, கோபத்திலும் என்ன பேச வேண்டும் என்று நம் மனதுடன் ஆலோசித்து விட்டு பேசினால் எந்த பிரச்னையும் சுமூகமாக முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.  



அமைதி அடைய வழிகளை கல் 

  • சினத்தை எதிர்கொள்வது என்பது ஒரு பெரிய சவால் தான்


  • உடற்பயிற்சி செய்து கோபத்தை தணிப்பது, ஒரு சிறு நடை பயிற்சி, சிரிப்பு மூட்டும் படங்களை பார்பது அல்லது கட்டுரைகளை படிப்பது போன்றவை மனதை தற்காலிகமாக வேறு வழியில் திருப்பும்


  • கடுமையான கோபம் தணிந்தவுடன், உங்கள் கோபத்தை நல்ல முறையில் எடுத்துரைத்து புரிய வைக்க வழிகளை தேடலாம்



பிரச்சனைக்கு தக்க முடிவை ஆலோசி
 

  •  கோபத்தில் இருக்கும் போது, கோபம் ஏன் வந்தது, எதற்கு வந்தது, யாரால் வந்தது என்று மட்டுமே ஆராய்ந்து ஆராய்ந்து மூளையை சூடாக்குவதை நிறுத்தி விட்டு, கோபம் வந்த காரணியை கண்டு பிடித்து அதற்கு ஒரு உடனடி தீர்வு காண்பது மிக்க அவசியம்

  •  ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு என்பது உண்டு

  • கோபம் எதையும் சீராக்காது, மேலும் மேலும் பிரச்சனைக்கே வழிகோலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், நண்பர்களே !


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக