Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 அக்டோபர், 2019

குரு பகவான் !!

Image result for குரு பகவான் !!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




அனைத்து கலைகளையும் கற்று அதில் தேர்ச்சி பெற ஒவ்வொரு ஜீவ ராசிகளுக்கும் ஒரு ஆசான் தேவை. அவர்கள் தேவர்களாக இருந்தாலும், அசுரர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இது சரி, இது தவறு என அறிவு புகட்ட ஒரு ஆசான் தேவை.

தான் அறிந்த மற்றும் அனுபவ ரீதியான பல விஷயங்களை உணர்ந்த ஆசான், தான் கற்றதை தன்னிடம் மட்டுமே வைத்துக்கொள்வது இல்லை. அதை தன்னை நம்பி வந்த மாணவர்களுக்கும் கற்று கொடுக்கிறார்கள்.

தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதி நேரத்தை நாளைய சமுதாயம் நன்றாக அமையும் பொருட்டு, பல அனுபவ ரீதியான உணர்வுகள் மற்றும் அறிவு பூர்வமான கதைகள் மூலம் எதுவும் அறியாத மாணவ செல்வங்களுக்கு புகட்டும் ஒரு உன்னதமான மாமனிதரே ஆசான் என்று சொல்லக்கூடிய 'குரு" ஆவார்.

குரு தனது மாணவர்கள் அழிந்து போகக்கூடிய எந்த ஒரு செயலையும் கற்பிப்பது இல்லை. மனிதர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற நபர்கள் இருப்பது போல் குருவிலும் இரண்டு மனிதர்கள் உள்ளனர்.

ஒருவர் தேவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை கூறி, வழி நடத்தும் தேவ குருவாகிய பிரகஸ்பதி என்னும் குருவும், அசுரர்களுக்கு குருவாகி அவர்களை வழி நடத்தும் சுக்கிராச்சாரியார் என்னும் அசுர குருவும் ஆவார். கற்பித்தல் மூலம் அடுத்த தலைமுறைகளை நல்வழிப்படுத்தும் பணியில் உள்ள ஆசானாகிய குரு பகவானை(பிரகஸ்பதி) பற்றி பார்ப்போம்.

 குருவுக்குரிய மலர் = முல்லை

 குருவுக்குரிய தானியங்கள் = கொண்டைக்கடலை, பச்சைக்கடலை

 குருவுக்குரிய வாகனம் = யானை

 குருவுக்குரிய நவரத்தினம் = புஷ்பராகம்

 குருவின் ஆதிக்க எண் = 3

 குருவின் அதிதேவதை = பிரம்மன்

 குருவின் வடிவம் = நீண்ட சதுர வடிவம்

குரு பகவானின் இயல்புகள் :

 இவர் மஞ்சள் நிறத்தை தன்னகத்தே கொண்டவர். கரிய கதிருடன் குருவின் மஞ்சள் ஒளி சேர்ந்தால் தான் உலகில் உயிரின் உற்பத்தி மேம்படும்.

 குரு புத்தி காரகன். மூளையின் செயல்பாட்டிற்கு அதிபதியும் இவரே.

இவர் பெருந்தன்மையான குணத்தை கொண்டவர்.

குருவின் காயத்ரி மந்திரம் :

ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
க்ருணி அஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்

குருவின் வரலாறு :

படைத்தல் தொழிலை மேற்கொண்ட பிரம்மன், படைத்தலுக்கு உதவியாக சப்த ரிஷிகளை உருவாக்கினார். இவர்களின் மூலமாக தான் அசுர - மானிட இனங்கள் தோன்றின. இந்த ரிஷிகளில் ஆங்கிரீஸர் என்பவரும் ஒருவர்.

ஆங்கிரீஸர் என்ற ரிஷிக்கு மூன்று புதல்வர்கள் தோன்றினார்கள். அவர்களில் ஒருவர்தான் வியாழன் என்னும் பிரகஸ்பதி ஆவார். இவர் பின்னாளில் தேவர்களுக்கு குருதேவர் ஆனதால் குருபகவான் என்ற பெயரைப் பெற்று தேவர்களை நல்முறையில் நடத்தினார்.

குருபகவான் நவகிரக பரிபாலனத்தில் மற்ற கிரகங்களால் ஏற்படும் தோஷத்தை நிவர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டவர்.

புராண காலத்தில் தேவர்களுக்கு இந்திரனாக வேண்டும் என்றால் நூற்றுக்கு மேற்பட்ட அசுவ மேதை யாகம் செய்து, அந்த யாகங்களை சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன் செய்ய வேண்டும். அதில் சிறந்தவர்கள் மட்டுமே இந்திரன் என்னும் தேவவேந்திரனாக முடியும் என்ற வரலாறு உண்டு.

அதேபோல் நால்வகை வேதங்களையும் கற்று உணர்ந்து, பல கலைகளையும் அறிந்து மற்றும் பல யாகங்கள், ஹோமங்கள் செய்து அதில் சிறப்பானவர்கள் மட்டுமே தேவர்களின் குரு என்னும் அந்தஸ்தை பெற முடியும். குருதேவர் அந்தஸ்தை பெற்றவர்கள் தான் கற்ற வேதங்களை பிறருக்கு உபதேசிக்கும் தகுதியை பெறுகிறார்.

இவ்வகையில் நால்வகை வேதங்களையும் சிறப்புற கற்று, பலகலைகளை அறிந்த பிரகஸ்பதி எனும் ஆங்கிரீஸ ரிஷயின் புதல்வன் தேவர்களுக்கு குருவாகினார்.

ஆசிரம வாழ்க்கை :

தேவர்களுக்கு குருவான பிரகஸ்பதி ஆசிரமம் அமைத்து, தான் கற்ற வேதங்களை மற்றவர்க்கு உபதேசம் செய்து வந்தார்.

இல்லற வாழ்க்கை :

உலகத்தில் உயிர்கள் தோன்ற வேண்டும் என்பதற்காக ரிஷிகள், முனிவர்கள் பிரம்மசாரிகளாக மட்டும் இல்லாமல் இல்லறத்தில் ஈடுபட்டு இல்லற வாழ்க்கையில் எப்படி இருத்தல் வேண்டும் மற்றும் மனைவியை எவ்வாறு மதித்து நடத்துதல் வேண்டும் என்பதைப் பற்றி எடுத்துரைத்தார்.

இல்லறத்தில் ஈடுபட்டாலும் துறவு வாழ்க்கையான தவம், யோகம் மற்றும் தியானம் போன்றவைகளையும் முறையாக செய்து வந்தார்கள். அதேபோல தேவர்களின் குருவான பிரகஸ்பதி தேவர்களுக்கு குருவாகி அவர்களை வழி நடத்துவது மட்டுமல்லாமல் தாரை என்னும் தாராதேவியுடன் இல்லறத்தில் ஈடுபட்டு, அவரிடம் வேதம் கற்க வந்த மாணவர்களுக்கு நால்வகை வேதங்களையும் உபதேசித்தார்.

இவ்விதம் கல்வி கற்க வந்த சீடர்களில் ஒருவர்தான் நவகிரக பரிபாலத்தில் சூரியனுக்கு அடுத்தப்படியான சந்திரன்.

சந்திரனால் பிரச்சனை தோன்றுதல் :

சந்திரன், பிரகஸ்பதியிடம் சிஷ்யனாக சேர்ந்து பல கலைகளை கற்றுத் தேர்ச்சியடைந்தார். பின் தன் ராஜ்யத்திற்கு திரும்பினார்.

ராஜ்யத்திற்கு திரும்பிய சந்திரன் ராஜசூய யாகம் நடத்த விரும்பி அனைத்து தேவர்கள் மற்றும் மகரிஷிகள் ஆகியோர்களை அழைத்தார். பின் சந்திரன் தன் குருவான பிரகஸ்பதிக்கு நேரில் சென்று முறையான அழைப்புகளை அளித்தார். ஆனால், குரு வேறு காரணத்தால் தன்னால் வர இயலாது எனவும், அதற்கு பதிலாக தனது துணைவியான தாராதேவியை யாகத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.

சந்திரன் ராஜசூய யாகம் நடத்த ஆரம்பித்தார். யாகம் நடக்க நடக்க சந்திரனின் அழகும், தேஜசும் பல மடங்கு அதிகரித்து பரிபூரண இளமை பெற்றார். அவரது அழகில் மயங்கி பல தேவமாதர்கள் அவர்மீது ஆசையும், மோகமும் கொள்ள ஆரம்பித்தனர். அதில் குருவின் மனைவியான தாராதேவியும் சந்திரனின் அழகில் மயங்கி அவர்மீது ஆசைபடத் தொடங்கினார். தேவமாதர்கள் சந்திரனின் மீது மோகம் கொள்வதை அறிந்த தேவர்கள் அவர்மீது பொறாமையும், அதிருப்தியையும் கொண்டனர்.

யாகம் முடிந்ததும் தேவர்கள் தனது தேவிகளுடன் தேவலோகம் செல்ல முயற்சித்தபோது பல தேவிமார்கள் வரமறுத்து சந்திரன் உடனேயே தங்கி விட்டனர். அதில் குருவின் மனைவியும், பேரழகியுமான தாராதேவியும் ஒருவர்.

தேவ மங்கையர்கள் சிறிது காலம் கழித்து தேவலோகத்திற்கு சென்றனர். ஆனால் தாராதேவி செல்லவில்லை. முதலில் எந்தவித தயக்கமும் இல்லாமல் அவர்களுக்கு சேவை செய்து வந்த சந்திரன், அவரின் அழகில் மயங்கி, தன் குருவின் மனைவி என்பதனையும் மறந்து தாராதேவியுடன் கூடி மகிழ்ந்தார்.

யாகம் முடிந்தும் தாராதேவி வராததால் குரு தன் தூதர்களை அனுப்பி அழைத்து வர சொன்னார். எனினும் தாராதேவி வரவில்லை. குரு சந்திரனிடம் தன் துணைவியை அனுப்பி வைக்கும்படி கேட்டபோது சந்திரன், அவர்கள் வந்தால் அழைத்துச் செல்லுங்கள் நான் அவர்களை கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கமாட்டேன் என்று கூறினார்.

குரு எவ்வளவோ முயன்றும் தன் துணைவியை அழைத்துப் போக முடியவில்லை. இறுதியில் இந்தப் பிரச்சனை சிவபெருமானிடம் சென்றது. சிவபெருமான் சந்திரனை அழைத்து தாராதேவியை குருவுடன் அனுப்பி வைக்கும்படி கூறினார். ஆனால் சந்திரன் சிவபெருமானின் உத்தரவுக்கும் கட்டுப்படவில்லை.

போர் ஆரம்பித்தல் :

சந்திரன், தேவி என்னுடன் விருப்பப்பட்டு உள்ளார். அடைக்கலம் என்று வந்தவர்களை விரட்டுவது சத்திரிய தர்மம் அல்ல. அடைக்கலம் கொடுப்பது தான் தர்மம் என்று கூறினார்.

தன் உத்தரவுக்கு கட்டுப்படாத சந்திரனின் மீது சிவபெருமான் கோபம் அடைந்து போர் தொடுத்தார். சிவபெருமானுக்கும், சந்திரனுக்கும் ஏற்பட்ட போரினால் இந்த பிரபஞ்சமே பாதிக்கப்பட்டது.

பிரபஞ்சத்தில் ஏற்பட்ட அழிவுகளை கண்ட தேவேந்திரன் பிரம்ம தேவரிடம் சென்று ஏற்பட்ட அழிவுகளை பற்றி கூறினார். மேற்கொண்டு போர் தொடர்ந்தால் இந்த பிரபஞ்சம் அழிவைச் சந்திக்கும் என கூறினார்.

பிரம்ம தேவரும் போரின் நிலையையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அறிந்து சந்திரனை அழைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக