இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத
வாடிக்கையாளர்களிடம் இருந்து 3,309.44 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக
கூறப்பட்டுள்ளது. சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் பிரதமரின் ஜன் தன் யோஜனா
திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் எந்த வித
வைப்புத் தொகையும் வைத்திருக்கத் தேவையில்லை, எனினும் மற்ற வங்கிக் கணக்குகளில்
வங்கிகளுக்கு ஏற்றவாறு வைப்புத் தொகை வைத்திருக்க வேண்டும்.
அந்த வைப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவைக் கட்டணமாக அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டு காலத்தில் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு வசூலிக்கப்பட்டுள்ள அபராத கட்டணங்களில், முக்கிய நான்கு தனியார் வங்கிகளில் முறையே கடந்த 2016 - 2017ம் ஆண்டில் 1,115.44 கோடி ரூபாயாகவும், இதுவே கடந்த 2017 - 2018ம் ஆண்டில் 1,138.43 கோடி ரூபாயாகவும், இதுவே 2018 - 2019ம் ஆண்டில் 1,312.92 கோடி ரூபாயாகவும் வசூலிக்கப்பட்டுள்ளதாம்.
இதுவே பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை, 18 பொதுத்துறை வங்கிகளின் அபராத கட்டணம் முறையே கடந்த 2016 - 2017ம் ஆண்டில் 790.22 கோடி ரூபாயாகவும், இதுவே கடந்த 2017 - 2018ம் ஆண்டில் 3,368.42 கோடி ரூபாயாகவும், இது கடந்த 2018 - 2019ம் ஆண்டில் 1,996.46 கோடி ரூபாயாகவும் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட கணக்குகள் உள்பட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குடன் சேர்த்து, மொத்தம் கடந்த மார்ச் 2019ன் படி 57.3 கோடி வங்கிக் கணக்குகள் இருந்தன.இதில் 35.27 கோடி கணக்குகள் ஜன் தன் கணக்குகளாக உள்ளனவாம்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக