இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பிரபல
கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு எதிரான பாலியல் வழக்கு போதிய ஆதாரங்கள்
இல்லாததால் கைவிடப்பட்டுள்ளது.
பாரிஸ்
செயின்ட் ஜெர்மன் கால்பந்து கிளப் அணியில் ஆடி வரும் நெய்மர், உலகிலேயே மிகவும்
அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். மேலும்
காயத்தால் அண்மைக்காலமாக ஆடவில்லை. இந்நிலையில் பாரிஸ் நகர ஓட்டல் ஒன்றில் தன்னை
பாலியல் பலாத்காரம் செய்ததாக நெய்மர் மீது இளம்பெண் புகார் செய்துள்ளார்.
பிரேசிலை
சேர்ந்த அந்த பெண், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆகி நட்பை வளர்த்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மே மாத மத்தியில் பாரிஸ் வருமாறு அந்த பெண்ணை நெய்மர்
அழைத்தாராம். அதன்படி சென்ற அப்பெண்ணை ஓட்டல் அறையில் பலாத்காரம் செய்தார் என
சாவ்பாவ்லோ நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கால்பந்து
நட்சத்திரமான நெய்மருக்கு எதிராக எழுந்த பாலியல் புகார், உலகம் முழுவதும்
உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நெய்மருக்கு எதிரான
குற்றச்சாட்டை பிரேசில் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த
நிலையில், நெய்மருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி
வழக்கை கைவிடுவதாக போலீசார் அட்டார்னி ஜெனரலுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து அறிய நெய்மரின் செய்தி தொடர்பாளரை தொடர்பு கொள்ள
முடியவில்லை. துவக்கத்தில் இருந்தே நெய்மர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை
திட்டவட்டமாக மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக