இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அமெரிக்காவின்
கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற உணவு திருவிழா கூட்டத்தில் ஒருவர் கண்மூடித்தனமாக
நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின்
கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கு பகுதியில் சான் ஜோஸ் நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர்
தூரத்தில் உள்ள கில்ராய் நகரில் ஆண்டுதோறும் ‘பூண்டு பிரியர்கள்’ நடத்தும் உணவு திருவிழா
அந்நாட்டின் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டின் மூன்றுநாள் திருவிழாவின் இறுதிநாளான நேற்று அங்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
அப்போது திருவிழா கூட்டத்தில் ஒருவர் திடீரென்று கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் சிதறி ஓடினர்.
இந்த எதிர்பாராத தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் 12 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக