இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பிரிட்டன் கொடி
பறந்த ஸ்வீடன் நாட்டு சரக்குக் கப்பலை ஈரான் சிறைபிடித்ததன் மூலம், சரக்குக்
கப்பல்களுக்கான கொடிகள் வழங்கப்படும் மர்மமான நடைமுறைகள் வெளிச்சத்திற்கு
வந்துள்ளன.
ஈரான் கொடி பறந்த சரக்குக் கப்பலை பிரிட்டன் பறிமுதல் செய்தது. இதற்கு பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையில் வைத்து பிரிட்டன் கொடி பறந்த சரக்குக் கப்பலை ஈரான் சிறைபிடித்தது. அந்தக் கப்பலில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 23 மாலுமிகள் இருந்தனர்.
பிரிட்டன் கொடி பறந்த அந்தக் கப்பலானது ஸ்வீடன் நாட்டிற்குச்
சொந்தமானது என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. பிரிட்டன் கொடி பறந்த ஸ்வீடன்
நாட்டு சரக்குக் கப்பலை ஈரான் பறிமுதல் செய்த விவகாரத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட
ஆராய்ச்சியின் முடிவில், சரக்கு கப்பல்களுக்கான கொடிகள் பெறப்படும் மர்ம நடைமுறை
வெளிச்சத்திற்கு வந்தது.
கிரெடிட் அட்டையை வைத்து வெறும் 15 நிமிடத்திலேயே, ஒரு
நாட்டில் சரக்கு கப்பலை பதிவு அல்லது மறுபதிவு செய்து அந்நாட்டின் கொடியை பெற்று
விட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கப்பல், குறிப்பிட்ட நாட்டில் பதிவு செய்து கொடியை பெற வேண்டுமானால், கப்பலின் உரிமையாளருக்கு அந்த நாட்டுடன் தொடர்பு இருக்க வேண்டும் என்பது முன்பு விதியாக இருந்தது. ஆனால் எந்த நாட்டுக் கொடியை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் எனும் அளவுக்கு தற்போது விதிமுறைகள் மாறி விட்டது.
உலகில் உள்ள 40 விழுக்காடு சரக்குக்
கப்பல்கள், பனாமா, லைபீரியா, மார்சல் தீவுகள் ஆகிய 3 நாடுகளில் பதிவு
செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அந்த நாடுகளுக்கு சொந்தமாக இருப்பவை வெறும் 169 கப்பல்கள் தான். இந்த நாடுகளில் பதிவு செய்து கொடிகளைப் பெறுவதற்கான விலை மிகவும் குறைவு. சுற்றுச்சூழல் விதி, பாதுகாப்பு அம்சங்கள், தொழிலாளர் சட்ட நடைமுறைகள் என எதையும் அந்த நாடுகள் கவனத்தில் கொள்ளாமல் கொடிகளை வழங்கி விடும் என்பதால், கப்பல் உரிமையாளர்களுக்கு லாபம் தான். ஆனால் அமெரிக்கா, கிரீஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் பதிவு செய்து கொடிகளைப் பெறுவதற்கு விலை அதிகம்.
மேலும் கொடிகளைக் கோரும் கப்பல்கள், விதிகளைக் கடைபிடிக்கின்றனவா என்பதை அந்நாடுகள் தீவிரமாக கண்காணிக்கும். சரக்கு கப்பல்களின் உரிமையாளர்கள் அந்த நாடுகளை விரும்புவதில்லை. ஆனால் இதுபோன்ற நடைமுறைகள், கப்பல் மாலுமிகளை சிக்கலில் மாட்டி விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள சரக்கு
கப்பல்களில் மாலுமிகளாக இருப்போர் 5% பேர் இந்தியர்கள் தான். நாடுகளுக்கு இடையிலான
பகையால் கப்பல்கள் சிறைபிடிக்கப்படும் போது பெரிதும் பாதிக்கப்படுவோர் மாலுமிகள்
தான்.
கப்பல்களுக்கு கொடி வழங்கும் நாடுகள், தங்கள் நாட்டு மாலுமிகளைத் தவிர பிறரைக் காப்பாற்ற மெனக்கெடுவதில்லை. பிரிட்டன் கொடி பறந்த ஸ்டெனா இம்பெரோ கப்பல், 18 இந்தியர்களுடன் ஈரான் வசம் உள்ள நிலையில், அந்தக் கப்பல் சிறைபிடிக்கப்பட்ட நாள் தொடங்கி தற்போது வரை ஒரு பயணத்திற்கு பல ஆயிரம் டாலர்கள் என மதிப்பிட்டு ஸ்டெனா இம்பெரோ உரிமையாளருக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
கப்பல்களுக்கு கொடி வழங்கும் நாடுகள், தங்கள் நாட்டு மாலுமிகளைத் தவிர பிறரைக் காப்பாற்ற மெனக்கெடுவதில்லை. பிரிட்டன் கொடி பறந்த ஸ்டெனா இம்பெரோ கப்பல், 18 இந்தியர்களுடன் ஈரான் வசம் உள்ள நிலையில், அந்தக் கப்பல் சிறைபிடிக்கப்பட்ட நாள் தொடங்கி தற்போது வரை ஒரு பயணத்திற்கு பல ஆயிரம் டாலர்கள் என மதிப்பிட்டு ஸ்டெனா இம்பெரோ உரிமையாளருக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக