இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ரியோ டி ஜெனிரோவில் பயணிகள் பஸ்ஸைக் கடத்திய நபரை சுட்டுக்கொன்ற பொலிஸார்
பணயக்கைதிகள் அனைவரையும் விடுவித்தனர்.
தன்னை ஒரு பொலிஸ்காரர் என்று அடையாளபடுத்திய கடத்தல்காரன் இன்று செவ்வாய்க்கிழமை காலை சாவ் கொங்காலோவின் புறநகர்ப் பகுதியை மத்திய ரியோவுடன் இணைக்கும் பரபரப்பான பாலத்தின் மேலாகப் பயணித்த பஸ்ஸில் 37 பேரை பணயக்கைதிகளாக கடத்திச் சென்றார்.
கடத்தல்காரனுடன் பொலிஸார் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின்போது பல பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் கடத்தல்காரன் பஸ்ஸினுள் பெற்றோலை ஊற்றி அச்சுறுத்தியதாகக் கூறப்படுகின்றது.
நான்கு மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கடத்தல்காரன் கோரிக்கைகள் எதனையும் முன்வைக்கவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பிரேசிலின் சிறப்புப் பொலிஸ் படையினர் ஸ்னைப்பர் தாக்குதல் மேற்கொண்டு கடத்தல்காரனை சுட்டுக்கொன்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக