இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னையில் அமைந்திருக்கும் ஒரு ஊர்வன காப்பு மையம் தான் சென்னை முதலைக் காப்பகம். இங்கு ஊர்வனவியல் தொடர்புடைய பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றது.இந்த காப்பகம் முதலை இனங்களை காப்பதற்காக ரோமுலஸ் விட்டேகர் எனும் பிரபல உயிரின ஆராய்ச்சியாளரால் 1976ஆம் ஆண்டு துவங்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் ஆப்பிரிக்க முதலைகளை பாதுகாப்பான சூழலில் வளர்த்து இனப்பெருக்கம் செய்விக்கும் நோக்கத்துடன் இந்த பண்ணை துவங்கப்பட்டிருக்கிறது.
இன்றும் 5000-க்கும் மேற்பட்ட முதலைகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
இந்த முதலைகளை பார்வையாளர்கள் பாதுகாப்பான தொலைவிலிருந்து இயற்கை சூழலில் திறந்தவெளி குளங்களில் பார்த்து ரசிக்கலாம்.
சிறப்புகள் :
இந்தியாவிலேயே மிகப்பெரிய முதலைப் பண்ணையான இது 3.2 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது.
உலக அளவில் மொத்தம் 23 வகையான முதலை இனங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் 17 வகையான முதலை இனங்கள் இந்தப் பண்ணையில் உள்ளன.
இந்த வளாகத்திலுள்ள முதலை பாதுகாப்பு மையத்தில் இனப்பெருக்க செய்விக்கப்படும் முதலைகள் சம்பல் மற்றும் மஹாநதி போன்ற ஆறுகளில் விடப்படுகின்றன.
இந்த பண்ணையில் பாம்பு விஷம் சேகரிப்பது குறித்த காட்சி விளக்கங்களை பார்வையாளர்களுக்கு அளிக்கின்றனர்.
2016-ல் 40வது ஆண்டில் காலடி எடுத்து வைத்த இந்த சென்னை முதலைக் காப்பகம் அழியும் நிலையில் உள்ள முதலைகளைக் காப்பாற்றும் ஒரு மரபணு வங்கியாக திகழ்கிறது.
முதலை இரை தேடும் முறை மிகவும் தனித்துவமானது. நீரிலிருந்து கரைக்கு வந்து வாயைப் பிளந்து வைத்துக்கொண்டு சிலை போலப் படுத்து இருக்கும். அதைப் பார்க்கும் உயிரினங்கள் அவற்றின் முன் பல கோமாளித் தனங்களைச் செய்ய நினைக்கும் வேளையில், முதலை தனது இரையை தேர்ந்தெடுத்துவிடும்.
எப்படி செல்வது?
சென்னையிலிருந்து 43கி.மீ. தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 14கி.மீ. தொலைவிலும் முதலைப்பண்ணை அமைந்துள்ளது.
சென்னையில் இருந்து பேருந்து மற்றும் சுற்றுலா வாகனங்கள் வாடகைக்கு உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
சென்னையில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
வண்டலூர் பூங்கா.
கிஷ்கிந்தா.
மகாபலிபுரம்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
பாம்புப் பண்ணை.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்.
மெரீனா கடற்கரை.
முட்டுக்காடு படகுத்துறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக