Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில், சின்னமனூர்

 Related image

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சின்னமனூர், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். ராணிமங்கம்மாளின் பாதுகாப்பாளராக இருந்த சின்னமநாயக்கர் என்பவரின் பெயரால் அமையப்பெற்ற சின்னமனூரில் பெருமாள் அருகில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் சிறப்பு வாய்ந்த லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

மூலவர் : லட்சுமிநாராயணர்.

அம்மன் : ஸ்ரீதேவி, பூதேவி.

தல விருட்சம் : மகிழம்.

தீர்த்தம் : சுரபி நதி.

பழமை : 500 வருடங்களுக்கு முன்.

ஊர் : சின்னமனூர்.

மாவட்டம் : தேனி.

தல வரலாறு :

முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த பெருமாள் பக்தர்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அமைப்பில் இங்கு சுரபி நதிக்கரையில் சிலை வடித்து கோவில் எழுப்பினர். ஒருசமயம் அந்நியர் படையெடுப்பின்போது, கோவில் சேதமடைந்தது. பின்பு இப்பகுதியை சேர மன்னர்கள் ஆண்டு வந்தனர்.

அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் மன்னர் கனவில் தோன்றிய பெருமாள், தனது இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு கோவில் எழுப்பும்படி கூறினார். அதன்பின்பு இங்கு குருவாயூரப்பன் அமைப்பில் சுவாமிக்கு சிலை வடித்த மன்னர், தாயார்களுடன் பிரதிஷ்டை செய்தார்.

குருவாயூரில் சின்னக்கண்ணனாக காட்சி தரும் பெருமாள் இங்கு, தாயார்களுடன் காட்சி தருவது விசேஷமான தரிசனம். பொதுவாக மகாலட்சுமி தாயாருடன் மட்டும் காட்சி தரும் மூர்த்தியே, 'லட்சுமி நாராயணர்" என்ற பெயரில் அழைக்கப்படுவார். ஆனால், இங்கு சுவாமியின் மார்பிலுள்ள மகாலட்சுமி பிரதான தாயாராக கருதப்படுவதால், சுவாமிக்கு இப்பெயரே அமைந்துவிட்டது.

தல பெருமை :

சுரபிநதியின் கிழக்கு கரையில் அமைந்த கோவில் இது. சுவாமி குருவாயூர் அமைப்பில் காட்சி தருவதால், இங்கும் லட்சுமிநாராயணர் கையில் வைத்திருக்கும் சந்தனத்தையே பிரசாதமாகத் தருகிறார்கள்.

கருவறையில் லட்சுமிநாராயணர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.

சுவாமி இங்கு பிரதானம் என்பதால், பரிவார மூர்த்திகள் இல்லை. சுவாமிக்கு எதிரே கருடாழ்வார் மட்டும் இருக்கிறார்.

தீராத நோய், வயிற்று வலி நோயால் அவதிப்படுபவர்கள், தங்களுக்குரிய நட்சத்திர நாளில் சுவாமிக்கு துண்டு கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். பக்தர்கள் கொடுக்கும் துண்டை, சுவாமியின் மடியில் கட்டி திருமஞ்சனம் செய்கின்றனர்.

பின்பு ஈரமான துண்டை, பக்தர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். இதை வீட்டில் விரித்து, அதன் மீது படுத்துக்கொண்டால், நோய் நிவர்த்தியாவதாகச் சொல்கிறார்கள்.

இப்பகுதி விவசாயம் செழிக்க, தங்கள் வயலில் நெல் விதைக்கும் முன்பாக சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜித்துச் செல்கிறார்கள்.

திருமணத்தடை உள்ள பெண்கள் பெருமாளுக்கும், ஆண்கள் ஸ்ரீதேவிக்கும் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.

பிராத்தனை :

குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, விவசாயம் செழிக்க, முதலாளிகளிடம் விசுவாசம் நிலைத்திருக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். சுவாமிக்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக