இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பிஸிபேளாபாத் எனப்படும் வடநாட்டு உணவு
தேவையான பொருள்கள்:
- அரிசி ஒரு ஆழாக்கு (ஒரு ஆழாக்கு 168 மில்லி லிட்டர்) (தண்ணீர் வேகவைக்க இரண்டு ஆழாக்கு ஊற்ற வேண்டும்)
- துவரம் பருப்பு அரை ஆழாக்கு (தண்ணீர் வேகவைக்க அரை ஆழாக்கு ஊற்ற வேண்டும்)
- கடலைப் பருப்பு 1 ஸ்பூன்
- தனியா 1 ஸ்பூன்
- லவங்கப்பட்டை 1 துண்டு
- கிராம்பு 2
- காய்ந்த மிளகாய் 5 மீடியம் சைஸ்
- பெருங்காயம் 1 சிட்டிகை
- தேங்காய்த் துருவல் 1 ஸ்பூன்
- கடுகு கால் ஸ்பூன்
- உருளைக் கிழங்கு 2 மீடியம் சைஸ்
- உப்பு தேவையான அளவு
- புளி 1 சிறிய எலுமிச்சை அளவு
செய்முறை:
- கடலைப் பருப்பு, தனியா, துவரம் பருப்பு, லவங்கப்பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகிய அனைத்தையும் எண்ணெயில் வறுத்துத் தேங்காய் உடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இது மசாலா போல வாசனை வரும்.
- துவரம் பருப்பு, அரிசி ஆகிய இந்த இரண்டையும் மேற்கண்ட அளவு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும்.
- பாதி வெந்த மாத்திரத்தில் நறுக்கிய உருளைக் கிழங்கை நன்கு கழுவிப் போடவும்.
- இவை எல்லாம் வெந்தவுடன் 3/4 ஆழாக்கு கரைத்த புளித் தண்ணீரை விட்டு உப்பு போட்டு முன்பு நாம் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாகக் கலந்து மேலும் கொதிக்க விடவும்.
- கொதிக்கும் சமயத்தில் அடிப் பிடிக்காமல் இருக்க நன்கு கிளறி விடவும். பின்னர் இறக்கி வைத்து விடவும்.
- உடன் அதே அடுப்பில் கடுகு, கருவேப்பில்லை எண்ணெய்யில் தாளித்து அதில் கொட்டி விடவும்.
- இதோ, இப்போது சுவையான பிஸி பேளாபாத் தயார் ஆகிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக