Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 10 ஆகஸ்ட், 2019

தந்தையின் சடலத்தின் முன் திருமணம் செய்துகொண்ட மகன் - சோக சம்பவம்..!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

திண்டிவனம் அருகே திருமணம் ஏற்பாடு செய்த நேரத்தில் தந்தை உயிரிழந்ததால், தந்தை உடலுக்கு முன் மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் ஜெகதீஸ்வரி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து செப்டம்பர் 2ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணி உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். 
இந்த சம்பவம் அலெக்சாண்டருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் தனது தந்தை ஆசிர்வாதத்துடன் தான் தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என அலெக்சாண்டர் விரும்பினார். இதற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்ததை அடுத்து தனது தந்தையின் கையில் தாலியை வைத்து, அவர் ஆசிர்வாதம் கிடைத்த நம்பிக்கையில் ஜெகதீஸ்வரியை அலெக்சாண்டர் மணமுடித்தார்.
தந்தை இழந்த சோகத்துடன், அவரது சடலத்திற்கு முன்பு அலெக்ஸாண்டர் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக