Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 21 ஆகஸ்ட், 2019

பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்கள் உயர்வு- அதிகாரி தகவல்


 பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்கள் உயர்வு- அதிகாரி தகவல்



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இந்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். 2018-19 நிதியாண்டில் 54,000 புதிய செல்போன் கோபுரங்களை நிறுவி உள்ளது. இது கடந்த மூன்று நிதியாண்டுகளில் மொத்தமாக நிறுவப்பட்ட கோபுரங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி செல்போன் கோபுரங்களையும் நிறுவத் தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாதம் வரை சுமார் 5,340 4ஜி கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் விரிவாக்கம் மற்றும் தற்போது அளிக்கும் கவர்ச்சிகரமான திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இதனால் செல்போன் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேறி, பி.எஸ்.என்.எல்.-ல் இணைந்து வருகின்றனர்.

2018-19-ம் ஆண்டில் மட்டும் 50 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் எம்.என்.பி.முறையில் தனியார் நிறுவனங்களில் இருந்து விலகி பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாக இணைந்து உள்ளனர்.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி வாடிக்கையாளர் எண்ணிக்கையை கூட்டிய இரண்டே நிறுவனங்களில் ஒன்றாக பி.எஸ்.என்.எல். விளங்குகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் வாடிக்கையாளர் எண்ணிக்கை 9 லட்சம் அதிகரித்துள்ளது.

ரூ.78, ரூ.98 மற்றும் ரூ.298 சிறப்பு கட்டண வவுச்சர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு “ஈராஸ் நவ்” என்னும் உயர்மதிப்பு சேவையை பி.எஸ்.என்.எல். சமீபத்தில் இலவசமாக அளித்துள்ளதன் மூலம் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகளோடு அளவற்ற திரைப்படங்கள் மற்றும் பிரத்யேக வீடியோ தொடர்களை கண்டு களிக்கும் வசதியை அளித்துள்ளது.

குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்யும் வகையில் பி.எஸ்.என்.எல். செயல்பட்டு வருகிறது என்று பி.எஸ்.என்.எல். இயக்குனர் ஷீத்லா பிரசாத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக