Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 21 ஆகஸ்ட், 2019

உலகின் நம்பர் 1 பிராண்டாக உருவெடுத்துள்ள கூகுள்...!


 Related image


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஆன்லைன் தேடுபொறி நிறுவனமான கூகுள், 2018 ஆம் ஆண்டின் சிறந்த பிராண்டாக உருவெடுத்துள்ளது. YouGov நிறுவனம் மக்களிடம் கருத்துக்கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 
மக்களால் விரும்பப்படும் சிறந்த ப்ராண்ட்கள் எவை? என்பது பற்றிய ஆய்வில் ஈடுபட்டது YouGov நிறுவனம். ஒரு பிராண்டின் ஒட்டுமொத்த தரம், மதிப்பு, தோற்றம், அதற்கு கிடைத்திருக்கும் நற்பெயர், நுகர்வோர்களின் திருப்தி மற்றும் அந்த பிராண்ட் மற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறதா உள்ளிட்ட விபரங்களை மக்களிடம் திரட்டியது இந்தநிறுவனம். 
இந்தப் பட்டியலில் இந்திய மக்களால் அதிகம் விரும்பப்படும் பிராண்டாக Google தேர்வாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக Facebookகிற்கு சொந்தமான Whatsap மற்றும் Googleக்கு சொந்தமான YouTube ஆகியவை முறையே 2 வது மற்றும் 3 வது இடங்களை பிடித்துள்ளன. Amazon 4வது இடத்திலும், Swiggy 5 வது இடத்தையும், சுற்றுலா நிறுவனமான Make My Trip ஆறாவது இடத்தையும், வாடகை கார் நிறுவனமான Uber ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளன. 
என்னதான் மக்களிடம் அதிகளவு பிரசித்தி பெற்றிருந்தாலும் Facebook இந்த பட்டியலில் எட்டாவது இடத்தைத்தான் பிடித்திருக்கின்றது.. மேலும் Ola மற்றும் Zomato  முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன. இதேபோன்று 2018 ம் ஆண்டு அதிக  பிராண்டுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது YouGov. இதில் ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால், உணவு விநியோக நிறுவனங்களான, Uber Eats, Zomato, Swiggy ஆகியவை தான் 2018 ம் ஆண்டு அதிக வளர்ச்சி பெற்ற பிராண்டுகளின் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளன. 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உணவு விநியோகிப்பவர் மூலமாக பல சர்ச்சைகளுக்கு உள்ளான  Zomato  தற்போது, அதிக வளர்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. தனது இமேஜ்ஜை மாற்றுவதற்காக  Zomato கையில் எடுத்த திட்டங்கள் பலனளித்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மட்டுமில்லாமல் மொத்தம் 29 நாடுகளில் உள்ள சுமார் 250 பிராண்டுகளின் தரவுகளை திரட்டி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  உலகளவில் சிறந்த பிராண்ட் பட்டியலிலும் கூகுள்தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதில் ஸ்வாரஸ்யம் என்னவென்றால்,  முதல் 10 இடங்களைப் பிடித்த ப்ராண்டுகளில் Nike Shoe நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து பிராண்டுகளுமே டிஜிட்டல் நிறுவனங்கள். இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் மக்கள் அனைவரும டிஜிட்டல் உலகத்திற்குள் நுழைந்து கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக